முதுநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் திடீர் சிக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2018

முதுநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் திடீர் சிக்கல்


அரசு பள்ளிகளில், பணி நியமனத்தின் போதே, ஊதிய உயர்வு கோரிக்கை எழுந்துள்ளதால், 1,400 ஆசிரியர்களை நியமிப்பதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

அரசு பள்ளிகளில், காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், தினசரி ஊதியம், சிறப்பு தொகுப்பூதியம் என, பல ஊதிய முறைகளில்,ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.தொகுப்பூதியங்களில் நியமிக்கப்படுவோர், பணிக்கு சேர்ந்த சில ஆண்டுகளில், சங்கமாக உருவாகி, பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தும் நிலை உள்ளது.

இந்நிலையில், தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில், பாடம் நடத்த, 11 பாடங்களுக்கு, 1,400 ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வித்துறை செயலகம் அனுமதி அளித்துள்ளது. காலியிடம் உள்ள பள்ளிகளில், பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக, மாதம், 7,500 ரூபாய் தொகுப்பூதியத்தில், முதுநிலை ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க, தலைமை ஆசிரியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இந்த பணி நியமனம் துவங்கியுள்ள நிலையில், பணிக்கு சேர்ந்தவர்களும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், ஊதிய உயர்வு கோரிக்கையை எழுப்பியுள்ளனர். பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு மாதம், 7,700 ரூபாய் சம்பளம் தரும் போது, முதுநிலை ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம், 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, 'வாட்ஸ் ஆப்' வழியாக பிரசாரம் துவக்கியுள்ளனர்.

இந்த நிலை நீடித்தால், புதிய ஆசிரியர்கள் பணிக்கு சேர்ந்த சில மாதங்களில், ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்துள்ளன. எனவே, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

25 comments:

 1. Aahaa enna idiot idio 8yr wr panna special teacher onnum pannamudila ithula neenga join one week illa. Super ?

  ReplyDelete
 2. Ellarum trb poda solli arpatam pannunga sir

  ReplyDelete
 3. Aahaa enna idiot idio 8yr wr panna special teacher onnum pannamudila ithula neenga join one week illa. Super ?

  ReplyDelete
 4. Now appointment in PTA teacher quality time six monthly only but some idiot Idea teacher should be eliminated within 6 week mind it

  ReplyDelete
 5. Best we only TRB exam

  ReplyDelete
 6. Now appointment in PTA teacher quality time six monthly only but some idiot Idea teacher should be eliminated within 6 week mind it

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. +1,+2, மாணவர்களின் நலன் கருதி PG TRB போட்டி தேர்வு மூலம் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

  ReplyDelete
 9. Replies
  1. முதலமைச்சர் கல்விமைச்சர்
   இவர்களை தற்காலிகமாக
   நியமனம் பன்னால் என்ன????

   Delete
 10. Special teacher Ku 7500/_ govt.headla.Nice.but,PTA la PG Asst.Ku 7500. PTA fundla. HM solrar PTA LA No fund nu.enna pandrathu?

  ReplyDelete
  Replies
  1. 4 yrs 5000 rs than 2 yrs aa than 7000 now 1 yr aa than 7700. Cs trs ellam madu madhiri velai parthu ivolo than salary rise only 5 yrs after.

   Delete
 11. 2017 PG TRB eco,Tamil,chemistry question paper very hard.65 mark eduthavangalai temporary postla 15000 Ku appointment pannalamey.Notification tharalamey sir.pl.

  ReplyDelete
 12. ஏம்பா எப்போ பார்த்தாலும் special Teachers உடன் போட்டிப் போட்டுக்கொண்டே இருக்கிறீங்க. நாங்களும் PG படித்தவர்கள் தானே நீங்க சாப்றதை தானே நாங்களும் சாப்றோம். நீங்க உடுத்துகிறதை நாங்களும் உடுத்துகிறோம். நீஙக எங்களைவிட எந்த விதத்தில் special னு மட்டும் சொல்லுங்கள். எப்போ பார்த்தாலும் எங்களோடே பிரச்சனைக்கு வாரிங்க. உங்க வேலையை நீங்க பாருங்க எங்க வேலையை நாங்க பார்க்கிறோம். If you start comparing with us then we know how to handle people like you mind it.

  ReplyDelete
 13. Sorry.Thappa sollala.All type teachers teacher than. Sorry

  ReplyDelete
 14. Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. யாருடைய மனசும் பாதிக்க க்கூடாதுனு நினைக்கிறேன்.

   Delete
 15. டி.இ.டி படித்தவர்களின் அறிவையும் காலத்தையும் வீணடிப்பு செய்தது போதும்...

  ReplyDelete
 16. Part time teachers kku may month salary 7yrs aa kidaiyathu

  ReplyDelete
 17. SPL.Tr,Pg Tr, B.T Asst., college lect.polytechnic lect
  Intha postingalam parliament election Ku munnala podalamey CM sir.pl.sir.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி