நாடு முழுவதும் உள்ள அனைத்து ராணுவ பள்ளிகளிலும், மாணவியரை சேர்க்க, ராணுவ அமைச்சகம்முடிவு செய்துள்ளது.தற்போது, நாடு முழுவதும், 26 ராணுவ பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ராணுவ கட்டுப்பாட்டுடன் பாடம் நடத்தப்படுகிறது.
மாணவர்களுக்கு மட்டுமே, இங்கு சேர்க்கை வழங்கப்படுகிறது.இந்நிலையில், ராணுவ பள்ளிகளில்,மாணவியரையும் சேர்ப்பது குறித்து, நீண்ட காலமாக பரிசீலித்து வந்த ராணுவ அமைச்சகம், முதல்கட்டமாக,இந்த ஆண்டு, மாணவியர் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது.
இதையடுத்து, உத்தர பிரதேச மாநில ராணுவ பள்ளியில், 9ம் வகுப்பில், 15 மாணவியருக்கும், மிசோரமில், ஆறு மாணவியருக்கும் சேர்க்கை வழங்கப்பட்டது.நாடு முழுவதும் உள்ள, அனைத்து ராணுவ பள்ளிகளிலும், மாணவியரை சேர்க்க, ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி