BSNL - Festival Special Recharge Offer! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2018

BSNL - Festival Special Recharge Offer!


விழாக்கால சலுகையாக பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பில்தொகையில் சிறப்பு தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது.

“தனலட்சுமி” என்ற இத்திட்டத்தின்படி, 18-10-2018 (ஆயுத பூஜை) மற்றும் 07-11-2018 (தீபாவளி) ஆகிய பண்டிகைகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தொலைபேசி, மொபைல் மற்றும் இதர சேவைகளுக்கான பில்களை செலுத்துபவர்களுக்கு சேவை வரி நீங்கலாக உள்ள தொகையில் தள்ளுபடி அளிக்கப்படும். வரும் மாதங்களுக்கான பில்களை முன்னதாக செலுத்துபவர்களுக்கும் இந்த தள்ளுபடி உண்டு.பில்லில் உள்ள தொகை முழுமையாக செலுத்தப்பட வேண்டும். வரும் மாதங்களுக்கான தொகையை முன்னதாக செலுத்துபவர்கள், பில் தொகைக்கு மேல் எந்த தொகையையும் செலுத்தலாம்.

அவ்வாறுசெலுத்துபவர்களுக்கு அடுத்த மாத பில்தொகையில், இந்தமாத பில் தொகைக்கும் அடுத்த மாத பில்லுக்கு முன்னதாக செலுத்திய தொகைக்கும் 1% தள்ளுபடி கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.இந்த விழாகால நாட்களில் அடுத்த 5 மாதங்களுக்கான பில் தொகைகளை முன்னதாக செலுத்துபவர்களுக்கு 3% தள்ளுபடி அடுத்துவரும் இரண்டாவது பில்லில் இருந்து தொடங்கி அந்தந்த பில்லில் வழங்கப்படும்.

இந்த விழாக்கால நாட்களில் பில் தொகையை செலுத்தும் அனைத்து பிஎஸ்என்எல் என்டர்பிரைஸ் வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கும் அனைத்து பில்களிலும் 2% தள்ளுபடி வழங்கப்படும்.பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த விழாக்கால தள்ளுபடி சலுகைகளை பயன்படுத்தி பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி