சிறப்பு ஆசிரியர் நியமனத்தில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யின் குளறுபடியை தொடர்ந்து, தமிழ் வழி சான்றிதழ் குறித்து, அரசுத் தேர்வு துறை விளக்க அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்வி பாடங்களில் காலியாக உள்ள, 1,325 ஆசிரியர் பணியிடங்களுக்கு, 2017 செப்., 23ல் தேர்வு நடத்தப்பட்டது.
இடம் பெறவில்லை
தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆகஸ்ட், 13ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. பணி நியமன பட்டியலை, அக்., 12ல், டி.ஆர்.பி., வெளியிட்டது.ஆனால், பல தேர்வர்கள், 'ஹையர் கிரேடு' என்ற, மேல்நிலை தொழில்நுட்ப தேர்வு தொடர்பான, தமிழ் வழி சான்றிதழை வழங்காததால், அதிக மதிப்பெண் பெற்றும், அவர்களின் பெயர்கள், பணி நியமன பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால், டி.ஆர்.பி., அலுவலகம் முன், தேர்வர்கள் போராட்டம் நடத்தினர்.சட்ட விரோதம்இதுகுறித்து, தேர்வர்கள் கூறியதாவது:தொழில்நுட்ப தேர்வை நடத்தும் அரசுத் தேர்வு துறை, தமிழ் வழி சான்றிதழை யாருக்கும் வழங்கவில்லை. ஆனால், சிலர் தேர்வுக்கு தொடர்பில்லாத தனியார் நிறுவனங்களில், தமிழ் வழி சான்றிதழ் வாங்கி சமர்ப்பித்ததை, டி.ஆர்.பி., ஏற்றுள்ளது. இது சட்ட விரோதம்; இதில் முறைகேடுகள் நடந்துள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில், தேர்வு வாரிய அதிகாரிகளின் விதிமீறலை, வெளிச்சத்துக்கு கொண்டு வரும் வகையில், அரசுத் தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:அரசு தேர்வு துறையால், தனித்தேர்வர்களுக்கு மட்டும், கீழ் நிலையான, 'லோயர் கிரேடு' மற்றும் மேல் நிலையான, 'ஹையர் கிரேடு' என்ற, அரசு தொழில் நுட்ப தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
ஒரே வினாத்தாள்தனி தேர்வர்கள் எந்த மொழியில் படித்தனர் என்ற விபரம் தெரியாததால், தேர்வர்களின் நலன் கருதி, தமிழ் மற்றும் ஆங்கில வழியில், ஒரே வினாத்தாளாக வழங்கப்படுகிறது.தொழில்நுட்ப தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை, அரசுத் தேர்வு துறை நடத்துவதில்லை. எனவே, தொழில்நுட்ப தேர்வுகளுக்கு, தமிழ் அல்லது ஆங்கில வழியில் பயின்றதற்கான சான்றிதழ்வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து, எந்த தேர்வரும், அரசுத் தேர்வு துறை அலுவலகத்தை அணுக வேண்டாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
ஆகவே அரச ஆசிரியர் தேர்வு வாரியம் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த நபர்களுக்கு மறுபரிசீலனை செய்ய கண்டிப்பாக வாய்ப்பு வழங்க மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஏற்கனவே அறிவித்த படி தகுதி வாய்ந்த நபர்கள் தவறுகளை சுட்டிக்காட்டி னால் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளார்
ReplyDeleteஆகவே அரச ஆசிரியர் தேர்வு வாரியம் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த நபர்களுக்கு மறுபரிசீலனை செய்ய கண்டிப்பாக வாய்ப்பு வழங்க மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஏற்கனவே அறிவித்த படி தகுதி வாய்ந்த நபர்கள் தவறுகளை சுட்டிக்காட்டி னால் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளார்
ReplyDeleteதமிழ்வழிச் சான்றிதழ் பத்தாம் வகுப்பு மற்றும் TTC க்குத்தான் வேண்டும் Higher Grade; Lower Gradeக்குத் தேவை இல்லை பொதுகல்வி 10 தொழில் கல்வி TTC இவைகளுக்குததான் தமிழ்வழிச்சான்று தேவை உதரணமாக TET யில் 10,12,M,A ஆங்கில வழியில் படித்திருந்தாலும் B,A மற்றும் B,ED தமிழ் வழியில் படித்திருத்தால் போதும் என்று தமிழ்வழி என்று எடுத்துக் கொண்டார்கள் அது தான் G.O முதலில் G.O வை புரிந்து கொள்ள வேண்டும்
ReplyDeleteகண்டிப்பாக மறுபரிசீலனை செய்து மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்து அடுத்த நிலையில் உள்ளவர் நிலைமையை உணர்ந்து தேர்வு வாரியத்தின் தலைவர் தனது மனசாட்சி படி மிகுந்த அக்கறை கொண்டு ஆராய்ந்து முடிவெடுத்து பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த நபர்களுக்கு நீதி வழங்க வேண்டும்.ஆராயாமல் அளித்த தீர்ப்பினால் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் வளையாத செங் கோள் வழைந்தது.பற்றி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சிலப்பதிகாரத்தில் அரிந்து இருப்பார். ஆகவே இந்த ஓவியம் பிரிவுகளில் higher greade தமிழ் மீடியம் சான்றிதழ் வேண்டும் என்று கூறி அடுத்த நிலையில் அதிகமான மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ள ஒருவர் கூட பாதிப்பு அடையும் நிலை ஏற்பட்டால் நாளை மறுமை நாளில் இறைவனின் தீர்பு மனதில் கொண்டு ஆராய்ந்து முடிவெடுத்து பாதிக்கப்பட்ட நபர் களுக்கு வழிவகை செய்ய வேண்டும்.மிக உயர்ந்த பதவியில் உள்ள தேர்வு வாரியத்தின் தலைவர் அம்மா அவர்களை நேரில் சந்தித்து என்னுடைய மன வேதனையை இந்த செய்தியை இதன் மூலம் பதிவு செய்தாலாவது.எனக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவை இட் டுள்ளேன். Trbக்கு நேரில் வந்து Ms அம்மா விடம் மருவும் கொடுத்துள்ளேன்.என்கைபேசி எண் 9092158273 பெயர் A.உமர் பாரூக்.BCM.mark 60 எனக்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும் அம்மா.
ReplyDeleteBcm பிரிவில் மதிப்பெண் அடிப்படையில் ஆண்கள் பிரிவில் மூன்றாவது நபராக இருக்கும் எனக்கு இந்த நிலை நடப்பு காலிப்பணியிடங்கள் 11 அதில் மொத்தமாக ஆண் பெண் வரிசை படி 9 வது இடத்தில் உள்ள நான் டிஆர்பி கேட்டு உள்ள அனைத்து தகுதி களையும் பெற்றுள்ளேன்.எனது கோரிக்கையை பரிசீலனை
Deleteசெய்து கண்டிப்பாக நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.ஏ.உமர்பாரூக். 9092158273.
மனசாட்சியா???
Deleteடிஆர்பி அதிகாரிகளுக்கா?....
special teacher physical education marupadiyum peyar pattiyal veliyiduvargala pls sollunga 71 mark list la name ills
ReplyDeleteMatta paya goverenment
ReplyDeleteReserved space yarruku next place il irukuravangalugu vaippu irukka yaravathu replay pannunga please
ReplyDeletecover+amount=government athuthan reserved
Deleteஇங்க தமிழ் வழி ஆங்கில வழின்னு என்ன இருக்கு, பள்ளிக்கூடம் வரைக்கும் தமிழ்ல படிச்சோம், கல்லூரில ஆங்கில வழி, எல்லாத்துக்கும் ஒன்னு தான, அப்பறம் தனியா இதுல ஒரு ஓட்டைய போட்டு ஏமாத்துற மாதிரி இருக்கு, தமிழ் வழின்னு வர்றவன் எவனும் உருப்புடியா அப்படி கல்லூரில படிச்சது இல்ல, பன்னிரண்டு வரைக்கும் ஆங்கில வழில படிச்சுட்டு எவனும் வாத்தியார் வேலைக்கு இல்ல tnpsc வேலைக்கு வர்றதே இல்ல, 99 சதவீதம் அடிச்சு சொல்லலாம், அவனுங்க எல்லாமே சாப்ட்வேர் கம்பெனி இல்ல எஞ்சினியர் வேலை தான் பாக்குறாங்க, நம்மள மாதிரி ஆளுங்க எல்லாத்துக்கும் ஒரே தகுதி தான், இதுல இந்த தமிழ் வழி ஆங்கில வழிய கண்டிப்பா ஒழிக்கணும், இல்லேன்னா ஒரு பிரச்சனை தீராது, தமிழ் நாட்டுல வாங்குற அரசு வேலைக்கு தமிழ்நாட்டுல பொறக்கணும் மற்றும் 10+2 வரைக்கும் தமிழ் ஒரு மொழி பாடாம இருக்கணும்னு ஒரு GO போடனும், அதெல்லாம் வரலையே, அத விட்டுட்டு போஸ்டிங்ல கோட்டா போட்டு ஏமாத்திட்டு, அதுவும் இல்லாம வேற மாநிலத்துகாரன் ஈஸியா இங்க வந்துறான், கேட்டா ரெண்டு வருசத்துல தமிழ் படிச்சு பாஸ் பண்ணா போதுமாம், அப்ப இங்கயே பொறந்து வளந்து படிச்சு வேலை இல்லாம இருக்கவன் ஏமாளியா தான் இருக்கனுமா?? தமிழ் போராளிகள் யாரும் கேக்க நாதி இல்ல போல, மத்த மாநிலத்துல நாம ஒரு எக்ஸாம் கூட எழுத முடியாது, கேரளா காரன் அவ்ளோ ரூல்ஸ் போட்ருக்கான், நாம அப்ளை கூட பண்ண முடியாது, கர்நாடக, மேற்கு வங்காளம், எல்லாமே அப்படி தான்,
ReplyDeleteதமிழ் வழி கல்வி சான்றிதல் குழப்பத்தால் 59+5 (Sewimng-BC)எடுத்தும் என்னால் உத்தேச இறுதி பட்டிட்யலில் வர இயலவில்லை...என்னைவிட குறைந்த மதிபெண்கள் பெற்று 11 நபர்கள் பட்டியலில் உள்ளனர்....நான் என்ன செய்ய வேண்டும்..
ReplyDeleteதமிழ் வழி கல்வி சான்றிதல் குழப்பத்தால் 59+5 (Sewing-BC)எடுத்தும் என்னால் உத்தேச இறுதி பட்டிட்யலில் வர இயலவில்லை...என்னைவிட குறைந்த மதிபெண்கள் பெற்று 11 நபர்கள் பட்டியலில் உள்ளனர்....நான் என்ன செய்ய வேண்டும்..
ReplyDeletecase podunga sir ,podalana unga life waste..file pannunga. sir.
ReplyDelete