இந்த ஆண்டுக்கான இரண்டாவது ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க மார்ச் 7 கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2019

இந்த ஆண்டுக்கான இரண்டாவது ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க மார்ச் 7 கடைசி


இந்த ஆண்டுக்கான இரண்டாவது ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 7 கடைசி நாளாகும்.என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., சி.எஃப்.டி. மற்றும் ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை பி.டெக்., படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு ஜே.இ.இ. முதல் நிலைத் தேர்வு,அதனைத் தொடர்ந்து ஜே.இ.இ. பிரதானத் தேர்வு (அட்வான்ஸ்டு) ஆகியவை நடத்தப்படுகின்றன.முதல் நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி.. சி.எஃப்.டி. ஆகிய கல்வி நிறுவனங்களில் சேர முடியும். அதேசமயம், முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்று, பிரதானத் தேர்விலும் தகுதி பெறுபவர்கள் ஐஐடி, ஐஐஎஸ்சி உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.இதில் ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும் (சி.பி.எஸ்.இ.) , பிரதானத் தேர்வை ஏதாவது ஒரு ஐஐடி-யும் இதுநரை நடத்தி வந்தன.

இந்த நிலையில், 2019 ஆம் கல்வியாண்டுக்கான முதல்நிலைத் தேர்வை நடத்தும் பொறுப்பை மத்திய அரசு என்.டி.ஏ. விடம் ஒப்படைத்தது.புதிய நடைமுறை: அதனைத் தொடர்ந்து ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் புதிய நடைமுறையை  என்.டி.ஏ. அறிமுகம் செய்தது. அதாவது தொடர்ச்சியாகஇரண்டு முறை முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும் எனஅறிவித்தது.

அதாவது, ஜனவரி மாத முதல்நிலைத் தேர்வில் திருப்திகரமான மதிப்பெண் பெறாத மாணவர்கள், உடனடியாக  ஏப்ரலில் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வில் பங்கேற்கலாம். இந்த இரண்டு தேர்வுகளில்அதிக மதிப்பெண்  எதுவோ அதை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த இரண்டு தேர்வுகளுக்குப் பிறகே ஜே.இ.இ. பிரதானத்  தேர்வு நடத்தப்படும்.அதனடிப்படையில், முதல் ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு ஜனவரி 8 முதல் 12 ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் தாள்-1 ஜனவரி 19 ஆம் தேதியும், தாள் இரண்டு ஜனவரி 31 ஆம் தேதியும் வெளியிடப்பட்டது.

இப்போது, இந்த ஆண்டுக்கான இரண்டாவது ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வுஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எப்போது? இந்த தேர்வானது ஏப்ரல் 7 முதல் 20 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க மார்ச் 7 கடைசியாகும்.மேலும் விவரங்களுக்கு www.nta.ac.in, www.jeemain.nic.in ஆகிய இணையதளங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி