எத்தனை முறை பார்வேர்ட் செய்கிறோம் ? வாட்ஸ்அப்பில் புதிய வசதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2019

எத்தனை முறை பார்வேர்ட் செய்கிறோம் ? வாட்ஸ்அப்பில் புதிய வசதி


🌀🌀எத்தனை முறை ஒரு குறுஞ்செய்தி பார்வேர்ட் (forward) செய்யப்பட்டுள்ளது என்பதைதெரிவிக்கும் புதிய முறை, வாட்ஸ் அப் பீட்டா வெர்சனில் அறிமுகமாகி உள்ளது

🌀🌀வாட்ஸ் அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது

🌀🌀இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும்தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த செயலியை உலகம் முழுவதிலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்

🌀🌀வாட்ஸ்அப்பின் முக்கிய பிரச்னையாக இருப்பது போலிச்செய்திகள் பரவுவது

🌀🌀இதனை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் பல மாறுதல்களை கொண்டு வருகிறது

🌀🌀பயனாளர்களின் தேவைக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு எளிதாகவும் அவ்வப்போது அப்டேட்டுகளை வாட்ஸ் அப் கொடுத்து வருகிறது

🌀🌀இந்நிலையில் எத்தனை முறை ஒரு குறுஞ்செய்தி பார்வேர்ட் (forward) செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும் புதிய முறை வாட்ஸ் அப் சோதனை முறையில் அறிமுகமாகி உள்ளது

🌀🌀வாட்ஸ் அப்பின் சோதனை ஓட்ட பதிவு எனப்படும் பீட்டா வெர்சனில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

🌀🌀பார்வேர்ட் செய்யும் குறுஞ்செய்தியை கிளிக் செய்து 'i' என்ற பொத்தானை அழுத்தினால் எத்தனை முறை அந்த குறுஞ்செய்தி பார்வேர்ட் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் காட்டப்படுகிறது

🌀🌀நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட முறை பார்வேர்ட் செய்யப்படும் செய்திகளாக இருந்தால் ,"அடிக்கடி பார்வேர்ட் செய்யப்படுகிறது" (Frequently Forwarded) என்ற தகவலும் இணைத்து காட்டப்படுகிறது

🌀🌀தவறான மற்றும் போலி செய்திகளை குறைக்க இந்த புதிய வசதியை அமல்படுத்தி உள்‌ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி