தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கிட இயக்குநர் உத்தரவு - kalviseithi

May 20, 2019

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கிட இயக்குநர் உத்தரவு


அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர், அலுவலர்கள் காலிபணியிடங்களை தெரிவிக்க தொடக்க கல்வி இயக்குநர் கருப்பச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர், ஆசிரியர் அல்லாத அலுவலர் பணியிடங்களுக்கு உரிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் 1 முதல் 9 ம் வகுப்பு வரை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், 10 முதல் பிளஸ் 2 வரை 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்கப்பட வேண்டும். அந்த வகையில் 2013 -- 14 கல்வி ஆண்டு வரை 7,270 உபரி ஆசிரியர் பணியிடங்களை கண்டறிந்து, அரசுக்கு ஒப்படைத்தனர். தற்போது 2014 முதல் 2018 வரை உள்ள உபரி ஆசிரியர்களை கணக்கிட்டு இயக்குனர் பார்வைக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் மே 31க்குள் அனுப்பி வைக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி