நீட் தேர்வு மையங்கள் மாற்றம் - அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2019

நீட் தேர்வு மையங்கள் மாற்றம் - அறிவிப்பு.


முக்கிய தகவல்: நீட் தேர்வு மையங்கள் திடீர் மாற்றம் - தேர்வர்கள் கவனிக்க.....

_நீட் தேர்வு எழுதுபவர்களின் ரோல் எண்கள் 410602881 முதல் 410603660 வரை உள்ளவர்களுக்கு மதுரை விராகனூர், வேலம்மாள் நகரில் உள்ள மதுரை - ராமேஸ்வரம் உயர் நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே  அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை விராகனூர், மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் நகரில் அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது._

_ரோல் எண்கள் 410608041 முதல் 410608640 வரை உள்ளவர்களுக்கு திருநெல்வேலி தியாகராஜா நகரில் உள்ள புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மதுரை அ.வளையாபட்டி அழகர் கோவிலில் உள்ள பாண்டுகுடி ஸ்ரீலட்சுமி நாராயணா வித்யாலயா பள்ளிக்கு தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது._

_ரோல் எண்கள் 410611401 முதல் 410611880 வரை உள்ளவர்களுக்கு மதுரை நரிமேட்டில் உள்ள PT ராஜன் சாலையில் அமைந்துள்ள கேந்திர்யா வித்யாலயா தேர்வு மையமாக ஏற்கெனவே  அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை விராகனூர், மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் நகரில் அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது._

_ரோல் எண்கள் 410611881 முதல் 410612360 வரை உள்ளவர்களுக்கு மதுரை P&T எக்ஸ்டன்சன் பகுதியில் உள்ள புனித மைக்கேல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை எய்ம்ஸ் ரோடு, தனபாண்டியன் நகரில் அமைந்துள்ள தனபாண்டியல்  பாலிடெக்னிக் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது._

_ரோல் எண்கள் 410612841 முதல் 410613320 வரை உள்ளவர்களுக்கு மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள கேந்திரியா வித்யாலயா தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை திருநகர் 3வது நிறுத்தம் அருகேயுள்ள CS ராமசாரி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது._

_அதேபோல் ரோல் எண்கள் 410616201 முதல் 410616560 வரை உள்ளவர்களுக்கு ஏற்கெனவே மதுரை ராஜ்ஸ்ரீ கார் கேரில் உள்ள கோபால கிருஷ்ண நகரில் அமைந்துள்ள மகாத்மா மாண்டசெரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை நாகமலை மேற்கு, மேலகுயில்குடி சாலையில் அமைந்துள்ள SBOA பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது._

தேர்வர்கள் புதிய தேர்வு மையங்களின் அமைவிடத்தை தெரிந்துவைத்துக்கொண்டு இடர்பாட்டை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் மதுரை நீட் தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளது. தேர்வுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. உங்கள் பகுதியில் யாரேனும் மதுரை தேர்வு மையங்களில் தேர்வெழுதுபவராக இருந்தால் அவர்களுக்கு தெரியப்படுத்தவும்...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி