COURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ரெசிடென்சியல் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 180 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12-6-2019. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2019

COURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ரெசிடென்சியல் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 180 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12-6-2019.


COURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ரெசிடென்சியல் அசிஸ்டெண்ட் உள்ளிட்டபணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 180 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12-6-2019. இணையமுகவரி : www.mhc.tn.gov.in

தமிழகத்தில் உயர்நீதிமன்றங்கள் (ஐகோர்ட்டு) சென்னை மற்றும் மதுரையில் செயல்படுகிறது. தற்போது சென்னையில் செயல்படும் மெட்ராஸ் ஐகோர்ட்டு நீதிமன்றத்தில் ரெசிடென்சியல் அசிஸ்டெண்ட்(வீட்டு உதவியாளர்) பணிகளுக்கு நேரடி தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்ய, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் பணியில்இருந்து புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பணிக்கு, இந்த அழைப்பின் மூலம் 180 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். தேர்வாளர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பதிவாளர்களின் வீடுகளில் பணியமர்த்தப்படுவார்கள். சமைத்தல், வீடு பராமரிப்பு போன்ற வேலைகள், தேர்வாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இவர்கள் சென்னை நீதிமன்றத்திலோ அல்லது மதுரை உயர்நீதிமன்ற கிளையிலோ பணிநியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சிஅல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பொது பிரிவு விண்ணப்பதாரர்கள், 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்கவேண்டும். மற்றபிரிவினருக்கு, வயது வரம்பில் தளர்வு வழங்கப்படுகின்றன. பொது பிரிவினர், ஓ.பி.சி.,பி.சி.எம்., எம்.பி.சி., டி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம் டி.டி.யாக இணைக்கப் பெற வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ), எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள், https://www.mhc.tn.gov.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 12-6-2019-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

1 comment:

  1. நான் Msc படித்துள்ளேன்.. இந்த வேலை எனக்கு தான்.. ஹையா ஜாலி..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி