அரசு பள்ளிகளில், 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2019

அரசு பள்ளிகளில், 'ஸ்போக்கன் இங்கிலீஷ்'


''அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், மாணவ - மாணவியர், ஆங்கிலத்தில் பேச, அரசு பயிற்சி அளிக்க வேண்டும்,'' என, முன்னாள், எம்.எல்.ஏ., அப்பாவு தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பள்ளிக்கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ், நேற்று, முன்னாள், எம்.எல்.ஏ., அப்பாவுவை அழைத்து பேசினார்.

அதன்பின், அப்பாவு, நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், 37 ஆயிரத்து,211 அரசு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இது தவிர, 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவை அனைத்தும், தமிழ் வழிக் கல்வியை போதிக்கின்றன. இப்பள்ளிகளில்,85 லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.இங்கு, இரண்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, ஆங்கிலம் கற்று கொடுக்கின்றனர். எனினும், ஆங்கிலம் பேச முடியாத நிலையில், பிளஸ் 2 முடித்து, மாணவர்கள் வெளியில் வருகின்றனர்.

அவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச, பயிற்சி கொடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் சென்றேன். நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று முதன்மை செயலர், என்னை அழைத்து பேசினார்.தமிழ் வழி கல்வி கற்கும் மாணவர்கள் மட்டும், ஆங்கிலம் தெரியாமல் வருகின்றனர். ஆங்கில வழி கல்வி கற்பிக்கும், 12 ஆயிரத்து, 419 பள்ளிகளில், 40 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்; அவர்கள் ஆங்கிலம் பேசுகின்றனர்.

இதன் காரணமாக, தமிழ் வழி கல்வி பள்ளியில், ஆண்டுதோறும், ஒரு லட்சம் மாணவர்கள் குறைந்து வருகின்றனர். ஆங்கிலம் கற்று கொடுக்காததால், தமிழ் வழி கல்வி பள்ளிகளை, மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.இதிலிருந்து காப்பாற்ற, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், இரண்டாம் வகுப்பிலிருந்து, பிளஸ் 2 வரை, ஆங்கிலம் பேச பயிற்சி அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

1 comment:

  1. I can make the students to speak in English within 30 days give me chance to show my efficiency my phone no 6374719293

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி