எஸ்பிஐ எழுத்தர் பணிக்கு முதல்கட்ட தேர்வு சென்னை ‘ரேஸ்’ மாணவர்கள் 4023 பேர் தேர்ச்சி பெற்று சாதனை - kalviseithi

Jul 26, 2019

எஸ்பிஐ எழுத்தர் பணிக்கு முதல்கட்ட தேர்வு சென்னை ‘ரேஸ்’ மாணவர்கள் 4023 பேர் தேர்ச்சி பெற்று சாதனை


பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி எழுத்தர் பணிக்கான முதற்கட்ட தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.

இந்த பணிக்காக தமிழகத்தில் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் சென்னை ‘ரேஸ் இன்ஸ்டிடியூட்டில்’ பயின்ற 4,023 மாணவர்கள் முதற்கட்ட தேர்வில் வெற்றியடைந்துள்ளனர்.

கடந்த ஐபிபிஎஸ் எழுத்தர் வங்கித் தேர்வில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற வர்களில் 56 சதவீத மாணவர்களும், ஐபிபிஎஸ்பிஓ தேர்வில் இந்திய அளவில் வெற்றி பெற்றவர்களில் 100-ல் 9 பேரும் தமிழகத்தில் ‘ரேஸ் இன்ஸ்டிடியூட்டில்’படித்தவர்கள் என்று ரேஸ் பொது மேலாளர் பிபின்ராஜ் தெரிவித்தார். அவர் கூறும்போது, "2016-ம் ஆண் டில் 2,646 பேர் வெற்றி பெற்ற நிலை யில், இந்த ஆண்டு எஸ்பிஐ எழுத்தர் பணிக்கான முதற்கட்ட தேர்வில் 4,023 பேர் சென்னை ‘ரேஸில்’ பயின்று வெற்றி பெற்றிருப்பது சாதனை யாகும். 6 அடுக்கு பயிற்சி முறை, கணினி பயிற்சி, 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி மற்றும் பல பயிற்சி முறைகளாலும் மாணவர்களின் கடினமான உழைப் பாலும் 4023 பேர் வெற்றி பெற்றுள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

இத்தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் எஸ்சி, ஓபிசி, பொது பிரிவினருக்கு 61.25 ஆகவும் எஸ்டி பிரிவினருக்கு 53.75 ஆகவும் பொருளா தாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவின ருக்கு 28.75 ஆகவும் நிர்ணயிக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி