நாடு முழுவதும் உள்ள 15 லட்சம் பள்ளிகளை இணையம் மூலம் இணைக்கும் 'ஷாகுன்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2019

நாடு முழுவதும் உள்ள 15 லட்சம் பள்ளிகளை இணையம் மூலம் இணைக்கும் 'ஷாகுன்'


நாடு முழுவதும் உள்ள 15 லட்சம் பள்ளிகளை இணையம் மூலம் இணைக்கும் 'ஷாகுன்' இணைய தளத்தை மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் துவக்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர் பேசுகையில், 'நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வி மற்றும் அதற்கான அடித்தளத்தை உறுதியாக்குவது போன்றவற்றை சார்ந்துள்ளது. இதற்கு 'ஷாகுன்' முக்கிய துவக்கமாக உள்ளது. இந்த போர்டல் மூலம் 2.3 லட்சம் கல்வி இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்படும்.

மேலும் ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய கல்வி கருவூலம் அமைக்கப் பட்டு, நாட்டில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகளின் தகவல்கள் பார்வைக்கு வைக்கப்படும்என்றார்.மனிதவள மேம்பாட்டு அதிகாரி, கேந்திரியா வித்யாலா, நவோதயா வித்யாலயா, சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் இணையதளங்கள், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுடன் இணைக்கப்பட்ட மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில்களும் ஒருங்கிணைக்கப்படுகிறது, என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி