ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு [ விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.09.2019 ] - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2019

ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு [ விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.09.2019 ]


இந்திய இராணுவ பொதுப் பள்ளிகள் என்பது இந்திய இராணுவ அதிகாரிகளின் குழந்தைகளின் கல்விக்கான ஒரு பொதுக் கல்வி நிறுவன அமைப்பாகும்.

இது இந்தியாவின் மிகப் பெரிய தொடர் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். இராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு இதனை செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 8000

பணி: PGT
தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

பணி: TGT
தகுதி: இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

பணி: PRT
தகுதி: இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும், டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்கள் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி அட்டைகளை பயன்படுத்தியோ அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.awesindia.com  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://aps-csb.in/PdfDocuments/GeneralInstructionCan.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2019 அக்டோபர் 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.09.2019

2 comments:

  1. This is completely a private temporary job and they give importance to military people. Dont Dont and pay money. Its an useless job b, salary will not be as per norms ,

    ReplyDelete
  2. Last year also recruit the same job my friend was apply and paid the fee.then question paper download fee 100 paid.this job is not secured dont apply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி