தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2019

தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு!


தமிழகம் முழுவதுமுள்ள மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர், அப்பகுதியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.அதன்படி, தமிழகத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள், அருகில் உள்ள தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் கட்டுப்பாடுகள் முழுதும் அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியின் வசம் ஒப்படைக்கப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி