சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2020

சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு!


தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் ஆண்டு தோறும் பொங்கல் போனஸ் வழங்கி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


அதேபோன்று, சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

சி மற்றும் டி பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், சத்துணவு, அங்கன்வாடி போன்றவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி