10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி யூடியூப் சேனல் மூலமாக பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2020

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி யூடியூப் சேனல் மூலமாக பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்


கல்விச் சேனல் மற்றும் அதன் யூட்டியூப் தளத்தின் மூலம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மாணவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 38-லிருந்து 40-ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 38 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று புதிதாக மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஆனால் 12-ம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்துவிட்டது. ஆனால் 10-ம் வகுப்பு தேர்வுகள் இன்னும் ஆரம்பிக்க கூட இல்லை. மார்ச் 27ஆம் தேதி தொடங்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது;  இணையவழி மற்றும் கல்விச் சேனல் மூலம் பொதுத்தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும் யூடியூப் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் அனைத்து பயிற்சிகளையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Please add kalvi tv in all dth like Tata sky,d2h,sundirect.....

    ReplyDelete
  2. I think that it will be really useful. Please announce the exam date as soon as possible .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி