ஜாக்டோ ஜியோ இன்று ( 15.03.2020 ) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! - kalviseithi

Mar 15, 2020

ஜாக்டோ ஜியோ இன்று ( 15.03.2020 ) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்


ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று ( 15 . 03 . 2020 ) ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு திரு . க . மீனாட்சி சுந்தரம் , திரு . அ . மாயவன் , திரு . கு . வெங்கடேசன் ஆகியோர் கூட்டுத் தலைமையேற்றனர் . இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன .

1 ) கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற காலவரையற்றப் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது 5068 ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களின்மீது போராட்ட காலத்தில் போடப்பட்ட 17 ( பி ) குற்றக் குறிப்பாணைகள் , 1500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டது ஆகியவை இன்னும் நிலுவையில் உள்ளதால் பதவி உயர்வும் , பணி ஓய்வும் , பணி ஓய்வுக்குப் பின்னர் கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பயன்களும் கிடைக்காமல் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர் . இந்த 17பி குற்றக் குறிப்பாணைகளை இரத்து செய்வது மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவும் மாண்புமிகு முதல்வர் , மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலாளர்களிடம் 16 . 03 . 2020 அன்று மனு அளித்தல்

2 ) 24 . 03 . 2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர் , மாண்புமிகு அமைச்சர்கள் ( பள்ளிக்கல்வி மற்றும் இளைஞர் நலம் , பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ) ஆகியோரைச் சந்தித்தல்

3 ) ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற விசாரணை குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்காக ஒருங்கிணைப்பாளர்கள் திரு . இரா . தாஸ் , திரு . மு . அன்பரசு , திரு . அ . மாயவன் , திரு . கு . வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது .

4 ) மாநில ஒருங்கிணைப்பாளர்களின் அடுத்த கூட்டம் எதிர்வரும் 11 . 04 . 2020 அன்று சென்னையில் நடைபெறும் .

1 comment:

 1. *முக்கிய அறிவிப்பு*

  ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அத்துணை தேர்வுகளிலும் முறைகேடு நடந்ததாக நாங்கள் கடந்த மாதம் வெளிப்படுத்தினோம்.
  அதை தொடர்ந்து பல்வேறு நண்பர்கள் எங்களை தொடர்பு கொண்டு முறைகேடாக பணி பெற்றவர்களை பற்றி கூறினார்கள்.
  அதை நாங்கள் ஆய்வு செய்கையில் அவர்கள் குறிப்பிட்டவற்றில் சிலவற்றில் முறைகேடு நடந்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளோம்.

  இதுபோன்று நண்பர்களே உங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் முறைகேடாக பணிநியமனம் பெற்றதாக உங்களுக்கு சந்தேகம் எழுந்தால் எங்களுக்கு தகவலை மட்டும் தெரிவிக்கவும்.
  விரிவான விசாரணையை நாங்கள் மேற்கொண்டு உறுதிதகவலை வெளியிடுவோம்.

  இரண்டாம் கட்டமாக பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்படுத்திஇன்னும் பல முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர உள்ளோம்.
  தகவல் தெரிவிக்க வேண்டிய எண்கள்

  8012776142
  8778229465
  *2013TNTETWA*

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி