எம்இ, எம்டெக் மாணவர் சேர்க் கைக்கான கேட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப் பட்டன. இத்தேர்வில் 18.8சத வீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் உதவித்தொகை யுடன் எம்இ, எம்டெக் உள்ளிட்ட முதுநிலை பொறியியல், தொழில் நுட்ப படிப்புகளில் சேர கேட் (GATE) நுழைவுத்தேர்வு தேர்ச்சி கட்டாயமாகும்.
மேலும், ஒருசில தனியார் கல்வி நிறுவனங்களில் உதவித்தொகை இல்லாமல் இப்படிப்புகளில் படிக்கவும் கேட் தேர்ச்சியை எதிர்பார்க்கின்றன. கேட் நுழைவுத்தேர்வை பெங்க ளூரு இந்திய அறிவியல் நிறு வனம் அல்லது சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று ஆண்டுதோறும் நடத்தும்.மொத்தம் 100 மதிப்பெண்ணைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக் கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனி கேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 25 பாடப்பிரிவுகளில் நடத்தப் படுகிறது.
அந்த வகையில், 2020-2021-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க் கைக்கான கேட் நுழைவுத்தேர்வு கடந்த பிப்ரவரி 1,2,8,9 ஆகிய தேதிகளில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது. டெல்லி ஐஐடி நடத்திய இத்தேர்வை அகில இந்திய அளவில் 6 லட்சத்து 85 ஆயிரத்து 88 மாணவ, மாணவிகள் எழுதினர்.
தேர்வு முடிவுகள் மார்ச் 16 -ம் தேதி வெளியிடப்படும் என்று அறி விக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு 3 நாட்கள் முன்னதாகவே நேற்று தேர்வு முடிவுகள் வெளி யிடப்பட்டன. தேர்வு எழுதியவர் களில் 18.8 சதவீதம் பேர்தேர்ச்சி பெற்றிருப்பதாக டெல்லி ஐஐடி அறிவித்துள்ளது.
TRB-POLYTECHNIC MATHS & ENGLISH
ReplyDeleteOne Month Special Training Programme Conducted by
Polytechnic Exam Cleared staff and Retired Govt Professor
Highlights This Programme Given material , Doubt session , Unit wise test, Special care for individual.
Class starts march 22nd
FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE.
CELL -9944500245