பகுதிநேர சிறப்பாசியர்களை ஆசிரியர் தேர்வு வாரித்தின் மூலம் தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டுகோள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2020

பகுதிநேர சிறப்பாசியர்களை ஆசிரியர் தேர்வு வாரித்தின் மூலம் தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டுகோள்!


வேண்டுகோள்
04.03.2020
~~~~~~~
பகுதிநேர சிறப்பாசியர்களை ஆசிரியர் தேர்வு வாரித்தின் மூலம் தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்ய மண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
============

2011ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பகுதிநேர சிறப்பாசிரியர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் மற்றும் தையல் ஆசிரியர்கள் என 16000 சிறப.பாசிரியர்களை மாதம் ரூ, 5000/- க்கு வாரம் மூன்று அரை  நாட்கள் பணி செய்ய நேரடியாக நியமனம் செய்தது தமிழக அரசு

ஊதிய உயர்வு வழங்க கோரி கோரிக்கை வைத்ததை ஏற்று  நான்காண்டுகள் கழித்து 2015ம் ஆண்டு ரூ.2000/-  உயர்த்தி ரூ.7000/-மாத ஊதியமாக வழங்கியது, அதன் பின் 2017ம் ஆண்டு மீண்டும் ரூ.700 உயரத்தி மாதம் ரூ.7700/- ஊதியமாக இதுநாள் வரை வழங்கப்பட்டு வருகிறது

பகுதிநேர சிறப்பாசியர்கள் வேலை நாட்கள் வாரத்திற்கு மூன்று அரை நாட்களாகும் இந்த சூழ்நிலையில் எப்படி மற்ற நாட்களில் வேறு இடத்தில் பணி செய்ய அனுமதிப்பார்கள் என்பதை உணரவேண்டும்,
1978ம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக தொழிற்கல்வி தொடங்கப்பட்டு தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமித்தது அப்போதய அரசு,
1978ம் ஆண்டு ஒப்பந்த  அடிப்படையில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவந்து நிரந்தரம் செய்து ஆணையிட்டது

2003ம் ஆண்டு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய கோரி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்ட சுமார் 100000 அரசு ஊழியர்கள் அசிரியர்கள் பணிநீக்கம் செய்த போது அலுவலக பணிகள் பாதிக்க கூடாது என்பதற்காக 15000 இளநிலை உதவியாளர்களை மாதம் ரூ 4000/-க்கு அப்போதய அரசு வேலைவாய்ப்பு மூலமாக பதிவுமூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள்,

அலுவலக இளநிலை உதவியாளர்களை தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தின் மூலமாக தான் பணி நியமணம் செய்ய வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் பின்பு வந்த அரசு அவர்களுக்கு என்று சிறப்பு தேர்வு நடத்தி அனைவரையும் நிரந்தரம் செய்தது.

2004 - 2006 ம் ஆண்டுகளில் நிதிநிலை சரியில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி 55 ஆயிரம் அனைத்து வகை ஆசிரியர்களையும் அதாவது இடைநிலை ஆசிரியர்களை ரூ 3000/- மாதம் ஊதியமாகவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.4000/- மாதம் ஊதியமாகவும் முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.4500/- மாதம் ஊதியமாக ஐந்து ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்தது பின்பு வந்த அரசு 2004 -2006ல் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் காலமுறை ஊதியத்திற்கு கொண்டுவந்து பணி நிரந்தரப் பின்பு வந்த அரசு. 

அதே போன்று 2003ம் ஆண்டு எல்கார்ட் மூலமாக 1800 கணினி ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம. செய்தார்கள் அவர்கள் அணைவரையும் 2006ம் வந்த அரசு அவர்களுக்கென்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தனித் தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்தது அரசு

அதே போன்று  பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சுமார் 16000  பேரை இப்போதுள்ள சட்டத்தின்படி அதாவது கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அவர்களுக்கு என்று சிறப்பு தேர்வை நடத்தி காலமுறை ஊதியத்திற்கு கொண்டு வந்து அவர்களில் வாழ்வில் விளக்கேற்றி வைக்க வருகின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடர் கல்வி மானிய கோரிக்கையில் அறிவிக்க மாண்புமிகு தமிழக  அவர்களையும் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்

சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044

20 comments:

  1. நன்றி அய்யா

    ReplyDelete
  2. நன்றி சார் கோரிக்கை வெற்றிபெறட்டும்

    ReplyDelete
  3. மாண்புமிகு தமிழக முதல்வர் அய்யா அவர்கள் பகுதி நேரஆசிரியர்களுக்கு தனி கவனம் செலுத்தி பணி நிரந்தரம் செய்யவேண்டும்.

    ReplyDelete
  4. அரசின் கொள்கைமுடிவில் பகுதி நேர ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவரவேண்டும்.

    ReplyDelete
  5. உண்மை நிலை என்ன? பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பெரும் பாலோர் பாடம் நடத்தும் பணியில் ஈடுபடுவதில்லை. இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே . 60,70,80 ஆயிரங்கள் சம்பளம் வாங்கும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பல பகுதிநேர ஆசிரியர்கள் கூனி குறுகி அலுவலக வேலைகளையும் OA வேலையும் செய்தும் நிரந்தர ஆசிரியர்களின் பாட வகுப்புகளையும் சேர்த்து கவனித்து கொண்டும் சந்தையில் காய்கறி வாங்கி கொடுத்துக்கொண்டும் இருப்பதை நானும் பார்த்திருக்கிறேன்.

      Delete
    2. தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர் சம்பளம் பற்றி நீங்கள் பேச வேண்டாம் உங்களுக்கு எது தேவையோ அதை மட்டும் கேட்வும்

      Delete
  6. clearly read your agreement. Part time teacher only part time. Your talent teacher means clear any exam.

    ReplyDelete
    Replies
    1. சட்டத்தையே அரசால் மாற்ற முடியும். இது வெறும் agreement

      Delete
  7. கலந்தாய்வு நடைபெறாமல் காத்திருக்கும் உடற்கல்வி சிறப்பாசிரியர் நிலை மாறுமா? இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ ஆண்டவா!!!

    ReplyDelete
    Replies
    1. ஓவியம் தமிழ் வழி?

      Delete
  8. Thanks for your support all government employees and teachers association.

    ReplyDelete
  9. நல்ல விஷயம் தான்

    ReplyDelete
  10. First posting for chemistry department

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு முன் வந்தவர்கள்,, trb pet,drawing exam,,,avargalukum innum posting kudukala

      Delete
  11. Please tell conforma to come up with PG TRB second list.

    ReplyDelete
  12. PG TRB Varuma friends conforma tell us

    ReplyDelete
  13. TRB-POLYTECHNIC and PG-TRB MATHS, ENGLISH, FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE. CELL -9944500245
    (Material available)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி