டீச்சர் எக்சேஞ்ச் புரோகிராம் திட்டத்தில் தமிழக ஆசிரியர்கள் கேரளாவுக்கு களப்பயணம் - கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2020

டீச்சர் எக்சேஞ்ச் புரோகிராம் திட்டத்தில் தமிழக ஆசிரியர்கள் கேரளாவுக்கு களப்பயணம் - கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு!



ஒருங்கிணைந்த பள்ளி கல்விதிட்டத்தின்கீழ்தமிழக ஆசிரியர்கள் 1200பேர்திருவ னந்தபுரத்திற்குகளப்பயண மாக அழைத்து செல்லப்பட இருக்கின்றனர் . ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் 2019 - 20ம் கல்வியாண்டில் ' குவாலிட்டி கம்போனென்ட்ஸ் - - செகண்டரி அன்ட் சீனியர் செகண்டரி ' என்ற தலைப்பில் அரசு பள்ளிகளில் இடைநிலை , மேல்நிலை பயிற்றுவிக்கும் அறிவியல் மற்றும் கணித பட்டதாரி , முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் களப்பயணம் மேற்கொள்ளும் வகையில் ' டீச்சர் எக்சேஞ்ச் புரோகிராம் ' என்ற செயல்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

இதற்காக ஒரு கல்வி மாவட்டத்திற்கு 10 ஆசிரி யர்கள் வீதம் 120 மாவட் டங்களில் இருந்தும் மொத்தம் 1200 ஆசிரியர்க ளுக்கு மொத்தம் ரூ . 24 லட்சம் நிதி அனுமதிக்கப் பட்டு மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது . இதற்காக ஒரு கல்வி மாவட்டத்திற்கு 6 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 4 முதுகலை பட்டதாரி ஆசிரியர் கள் என்று 101 ஆசிரியர்கள் வீதம் 120 கல்வி மாவட்டங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 200 ஆசிரியர்கள் தெரிவு செய் யப்பட்டுள்ளனர் .

இவ்வாசிரியர்கள் நேரடி களப்பயணம் மேற் கொள்ளத்தக்க தேசிய விண்வெளி ஆய்வு மையம் , அருங்காட்சியகங் கள் மற்றும் பயிற்சி அரங் கம் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளடங்கிய கேரள மாநிலம் , திருவ னந்தபுரம் அழைத்து செல் லப்பட உள்ளனர் . இந்த களப்பயணத்தின்போது விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த சிறப்பு வகுப்புக ளும் வல்லுநர்களால் நடத் தப்பட உள்ளது . இந்த செயல்பாடு மத்திய அரசு நிறுவனமான ஐஆர்சிடிசி உடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது .

 இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி