PTA புத்தகத்தில் இருந்து 42 மதிப்பெண்களுக்கு வினாக்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2020

PTA புத்தகத்தில் இருந்து 42 மதிப்பெண்களுக்கு வினாக்கள்!


பிளஸ் 2 தமிழ்பாட பொதுத்தேர்வில் , 42 மதிப் பெண்க ளுக்கு , பி . டி . ஏ . , புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்கள் கேட்கப்பட்ட தால் , இப்புத்தகம் வாங்க பெற்றோர் ஆர்வம் காட்டு கின்றனர் . தமிழகம் முழுக்க , பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு , கடந்த 2ம் தேதி துவங்கியது . தமிழ்ப்பாடத்தேர்வு , எளி மையாக இருந்ததாக மாண வர்கள் தெரிவித்தனர் . மொத்தம் , 90 மதிப்பெண் களுக்கு , மூன்று மணிநேரம் தேர்வு நடந்தது .

இதில் , 42 மதிப்பெண்களுக்கான வினாக்கள் , பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிட்ட , பயிற்சி புத்தகத்தில் இருந்து இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது . நாளை ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வு நடக்கவுள்ளதால் , பி . டி . ஏ . , புத்தகம் வாங்க , பெற்றோர் பலர் ஆர்வம் காட்டுகின்றனர் . ராஜவீதி , துணிவணிகர்மேல் நிலைப்பள்ளியில் , இப்புத் தகத்துக்கான விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது .



முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறுகை யில் , ' தமிழ்ப்பாட தேர்வில் , 76 மதிப்பெண்களுக்கு , பி . டி . ஏ . , புத்தகத்தில் இருந்து வினாக்கள் இடம்
பெற்றதாக , சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வருகிறது . ஆனால் , 42 மதிப்பெண்களுக்கு தான் , வினாக்கள் இடம்பெற் றுள்ளன . மேலும் , புதிய பாடத்திட்டம் என்பதால் , இதுபோன்ற வினாவங் கியில் பயிற்சி பெறுவ தன் மூலம் , கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் , தேர்ச்சி பெற வாய்ப்புள் ளது . ஆனால் , அடுத்தடுத்த தேர்வுகளுக்கும் , இப்புத்த கத்தில் இருந்து வினாக்கள் இடம்பெறும் என உறுதியாக கூற முடியாது . இதை மாணவர்கள் பயிற்சி பெற , பயன்படுத்தி கொள்ளலாம் ' என்றனர் .

1 comment:

  1. Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/FxXOZ59YTATFwfGkHArdZ2

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி