உதவிபெறும் பள்ளிச் செயலர்கள் கையெழுத்திட முடியாததால் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2020

உதவிபெறும் பள்ளிச் செயலர்கள் கையெழுத்திட முடியாததால் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல்!


உதவிபெறும் பள்ளிச் செயலர்கள் கையெழுத்திட முடியாததால் பல பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களின் ஊதிய பட்டியலில் பள்ளிச் செயலர்கள் கையெழுத்திட்டு, தொடர்ந்து கல்வி அலுவலர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.


அதன்பிறகு ஊதியப்பட்டியல் கருவூலத்திற்கு அனுப்பப்பட்டு, ஆசிரியர்கள், பணியாளர்களின் வங்கி கணக்கில் ஊதியம் செலுத்தப்படும்.

பெரும்பாலான உதவி பெறும் பள்ளிகளின் செயலர்கள் வெளியூர்களில் உள்ளனர். அவர்கள் ஊதியப் பட்டியலில் கையெழுத்திடும் சமயங்களில் மட்டுமே பள்ளிகளுக்கு வருவர்.

அல்லது பள்ளி ஊழியர்கள் சென்று செயலரிடம் கையெழுத்து பெறுவர். தற்போது கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பல பள்ளிகளில் ஊதியப் பட்டியலில் செயலர்களிடம் கையெழுத்து பெற முடியவில்லை. இதனால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு இந்த மாதம் ஊதியம் கிடைக்கவில்லை.

இதையடுத்து உதவிபெறும் பள்ளிகளில் தற்சமயம் செயலர்களுக்கு பதிலாக அரசு பள்ளிகளை போன்று தலைமைஆசிரியர்களிடம் கையொப்பம் பெற்று ஊதியம் வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி