1 முதல் 8 ஆம் வகுப்புக்கு ஆன்லைன் கல்வி வருகிறதா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2020

1 முதல் 8 ஆம் வகுப்புக்கு ஆன்லைன் கல்வி வருகிறதா?


இந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் உள்ள பள்ளிகள் முதலில் திறக்கப்படும்.

 துவக்க நிலை வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை. அவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் கல்வியைத் தொடருவார்கள்.

தனிமனித இடைவெளியை பராமரிப்பதற்காக 30 சதவிகித மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்படும்.மண்டல வாரியாக பள்ளிகளை மீண்டும் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள போதிலும், இது உயர்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.

ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், பள்ளிகள் முழு வீச்சில் செயல்படும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

கொரோனா பாதுகாப்பிற்காக விதிக்கப்பட்டிருக்கும் விதிகளை சிறு குழந்தைகள் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்பதால், அவர்கள் தற்போதைக்கு வீட்டில் இருந்தபடியே பாடங்களைத் தொடருவார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் இந்த வார இறுதியில் வெளியிடப்படும். இதனுடன் தொடர்புடைய அனைத்து அமைச்சகங்களும், இதற்கு ஒப்புதல் அளித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி