பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பதா என்பது குறித்து மதிப்பெண்களை கூர்ந்து கவனித்து அரசு முடிவெடுக்கும் என்றும் பொதுத்தேர்வு முடிந்த பின், பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தேதி அறிவிக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15-ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.இந்நிலையில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்அப்போது அவரிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்க்ளா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், மதிப்பெண்கள் வந்த பிறகு அவர்கள்எப்படி தேர்வு எழுதியிருக்கிறார்கள் என்பது குறித்து அரசு கூர்ந்து கவனித்து அரசு முடிவெடுக்கும் என்று கூறினார்.தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: 'நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூன் மாதம் 2வது வாரத்தில் தொடங்க உள்ளது. இதில் 7,300 மாண்வர்களுக்கு 9 கல்லூரிகளில் 35 நாட்கள் பயிற்சி வழங்கபடும். இந்த ஆண்டு குறைந்தது ஒரு 100 பேராவது மருத்துவக் கல்லூரிக்கு செல்கிற வாய்ப்பு உருவாகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உருவாகியிருக்கிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த பின், பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தேதி அறிவிக்கப்படும்.தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் வசூலிப்பது குறித்து, கூர்ந்து கவனித்து வருகிறோம். தற்போதைய இக்கட்டான சூழலில், ஆதாரப்பூர்வமாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.' இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.பத்தாம் வகுப்பு பொதுதேர்வு, ஜூன் 15-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடைய உள்ளது. அதற்கு அடுத்த நாள் ஜூன் 26-ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அடுத்த நாள் சனி, ஞாயிறு என்பதால் விடுமுறை நாட்களாக உள்ளன.
அதனால், தமிழகத்தில் ஜூலை 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலொசனை நடத்தி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tamilnadu govt will follow Andhra govt.so school opening will be on August month
ReplyDeletePlease school reopen on January 2021.
ReplyDelete2021 june
Deleteசெப்டம்பரில் தான் பள்ளி திறக்கப்படும்.
ReplyDeleteThayavu seithu june 2021 il open pannunga
ReplyDeleteare you a student
DeleteNeega solurdhu ellmay weste thalivaru eppa soluvaro appo vanga ....
ReplyDelete10th STD public hall ticket .??
ReplyDeleteAtleast pl.issue the books in the month of june,,it is useful to students for their own prepaprtion.......
ReplyDeleteMarch..கொரோனா தொற்றை தடுக்க பள்ளிகள் இயங்காது..
ReplyDeleteMay.. கொரோனா தொற்று இருந்தா என்ன.. இல்லனா என்ன.. Tasmac முதல்.. பள்ளிகள் வரு அனைத்தும் இயங்கும்..
Tnpsc.. TRB exam sir??
என்னப்பா நீ.. கொரோனா நேரத்துல பொறுப்பு இல்லாம... corona zero ஆனா தான்... tnpsc.. trb எல்லாம்..
ஆனா lkg ukg எல்லாம் நடக்கும்
Sir, please june 2021 school open pannunga sir.
ReplyDeletePls reopen school on june 1st 2020
ReplyDeleteIt is impossible
DeleteLets MLA and MPs schools Opens to collect money & issue new notification classes will open after 2021
DeletePls reopen school on June 1st 2022
ReplyDeleteI think it's possible only after Pongal since already our forefathers told thai piranthal vazhi pirrakkum For schools Only!!!
ReplyDelete