பள்ளிகளுக்கான உபகரணங்கள் வாங்குவதில் தொடரும் அவலம்! - kalviseithi

May 7, 2020

பள்ளிகளுக்கான உபகரணங்கள் வாங்குவதில் தொடரும் அவலம்!


அரசு பள்ளிகளுக்கு வழங்கப் பட்ட விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் தரமற்றவையாக இருப்பதாக , தலைமை ஆசிரியர்கள் குமுறி வரு கின்ற னர் . தமிழகத்தில் 24 , 321 அரசு தொடக்கப்பள்ளிகள் , 6 , 966 அரசு நடுநிலைப்பள்ளிகள் உள்ளன . அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டு திறனை மேம்படுத்திட ஆண்டுதோ றும் ரூ . 10 ஆயிரம் மதிப்பில் கைப்பந்து , வலைப்பந்து , கிரிக்கெட் பேட் உள் ளிட்ட சாதனங்கள் வாங்கி கொள்ள அனுமதி உள்ளது .

அதேபோல் ஆங்கில மொழியறிவு , திறனறிவு உள்ளிட்டவைகளை வளர்த்துக் கொள்ள ரூ . 5 ஆயிரமும் ,
சுற்றுச்சூழலை மேம்படுத்திட , மரம் வளர்த்தல் உள்ளிட்ட சமூக ஆர்வத்தை ஏற்படுத்த , நீதிநூல்கள் வாங்கிநூலகம் ஏற்படுத்த ரூ . 15 ஆயிரமும் வழங்கப்படுகிறது . கடந்தாண்டு விளை யாட்டு உபகரணங்களை வழங்கிய நிறுவனத்தின் பொருட்கள் அனைத்தும் தரமற்றதாக இருந்துள் ளது .

அதே நிறுவனமே தற்போதும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிட பள்ளி வங்கிக்கணக்கில் இருந்து பணம் பெறுவதற்கு முயற்சித்துள்ளது . இதற்கு தலைமை ஆசிரியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர் . விஷயம் கேள் விப்பட்ட அந்த நிறுவனம் கல்வித்துறையில் உள்ள உயர் அதிகாரிகளின் மூலம் அழுத்தம் கொடுத்து , அந்த நிறுவனத்திற்கான ' செக் ' கை பெற்றுக் கொண்டுள்ள தாம் . ஆசியர்களிடையே இது அதிருப்தியை ஏற்ப டுத்தி இருக்கிறது .

இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறும் போது , “ கல்வித்துறைக்கு வாங்கப்படும் பொருட்கள் அனைத்தையும் முதல்வ ரின் மாவட்டமான சேலத் தில் உள்ள ஒரு நிறுவனம் சப்ளை செய்கிறது . விளை யாட்டு பொருட்கள் பெரும் பாலும் தரமற்றவை . ரூ . 4 ஆயிரம் பெறுமானமுள்ள அந்த பொருட்களுக்கு ரூ . 10 ஆயிரம் ' செக் ' வாங்கு கிறார்கள் . மொழியறிவை வளர்க்க கொடுத்துள்ள பயிற்சி அட்டைகள் எளி தில் சேதமடையக்கூடிய வையாக உள்ளன . இதற்கு ரூ . 5 ஆயிரமும் , பள்ளி நூலகங்களுக்கு வழங்கப் பட்டுள்ள புத்தகங்களுக்கு ரூ . 15 ஆயிரமும் வழங்குமாறு கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்ற னர் . இவற்றின் மொத்த விலை ரூ . 10 ஆயிரத்தை தாண்டாது . ஆனால் பள்ளி வங்கிக்கணக்கில் இருந்து ரூ . 35 ஆயிரத்திற்கு ' செக் ' வழங்கப்பட்டுள் ளது . சேலத்தைச் சேர்ந்த அந்த நிறுவனம் , தமிழகம் முழுவதும் இந்த பொருட் களை சப்ளை செய்வதன் மூலம் பல கோடிகளை சம் பாதிக்கிறது . இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் சிலர்தட்டிக்கேட்டபோது , மாவட்டம் விட்டு மாவட் டம் இடமாறுதல் வரும் என் றும் மிரட்டப்படுகிறார்கள் ” என்றனர் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி