ஒன்பது வருடங்களாக வழங்கப் படாத Part Time Teachers - 8 Month Salary! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2020

ஒன்பது வருடங்களாக வழங்கப் படாத Part Time Teachers - 8 Month Salary!


ஒன்பது வருடங்களாக வழங்கப் படாத எட்டு மாத ஊதியம் !

தமிழ்நாடு முதலமைச்சரால் மட்டுமே தீர்வு காண இயலும் : 

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் !!

கடந்த ஒன்பது வருடங்களாக வழங்கப்படாத எட்டு மாத ஊதியம்,  நடப்பு ஆண்டான 2020 ஆம் ஆண்டிலாவது கிடைக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை மேற் கொள்ளவேண்டும்.அவரால் மட்டுமே  சாத்தியம் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு முதலமைச் சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்  செய்தியாளர்களிடம் தெரிவித்த தாவது : " படித்து பட்டம் பெற்று ஆசிரியர் பணி கிடைக்காமல் வறுமையில் வாழும் உடற்கல்வி,
ஓவியம், கணினி அறிவியல்,இசை, தையல், தோட்டகலை,கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி ஆகிய பட்டதாரிகள் நிலையறிந்து அவர்களை பகுதி நேர ஆசிரியர் களாக தமிழ் நாடுஅரசுபள்ளிகளில் பணி புரிய  உத்தரவிட்டதுடன் 16549 ஆசிரியர்களையும் பணிநியமனம் செய்தவர் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாதான். கடந்த 2011 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதியன்று  சட்டப்பேரவை விதி 110-படி, ஆண்டு முழுவதும் ஊதியம் பெறும் வகையில்  99 கோடியே 29 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16549 பகுதி நேர ஆசிரியர்கள் பணி அமர்த்தப் பட்டனர். ஆனாலும் 5000 ரூபாய் தொகுப்பூதியம் என்ற நிலையில் அவர்களுக்கு உடனே ஊதியம் வழங்கப்படவில்லை. தொடர்ந்து ஏப்ரல் மாதமும் பணி செய்திருந்த போதிலும் அம்மாதத்திற்கான  ஊதியமும் வழங்கப்படவில்லை. பின்னர் வந்த மே மாதம் பள்ளி முழுஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறை யும்  சென்று விட்டது.  ஆனால் மாத ஊதியம் குறித்து தகவல் எதுவுமே தெரியவில்லை. அடுத்த கல்வி யாண்டும் பின்னர் துவங்கிவிட்டது.

ஜூன் மாதம் பள்ளிதொடங்கியதும் வேலைக்கு சேர்ந்த 4வது மாதத்தில் தான்முதன் முதலில் வழங்கப்பட்ட ஊதியத்தில்  மே மாதம் தவிர மார்ச், ஏப்ரல்ஆகிய இரண்டு மாதங்களுக்கு மட்டுமே ஊதியம்  வழங்கப்பட்டது. இதுவே  சிக்கலுக்கு முதல் காரணம்.இப்படி முதல் முறை விடுபட்ட  2012 ஆம் ஆண்டிற்கான மே மாத ஊதியம்  இதுவரை கடந்த 8 வருடமாக வழங்கப்படவில்லை என்பது தான் வேதனை. இதனால் ஒவ்வொரு வருக்கும் 50 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் 2014ம் ஆண்டு 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தி 7 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது. பின்னர் 2017ம் ஆண்டு  700 ரூபாய் உயர்த்தப்பட்டு,  தற்போது மாதம் 7700  ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 9 ஆண்டு களாக பணி புரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு நடப்பு மே மாதம் ஊதியம் உட் பட 8 வருடங் களாக வழங்கப்படாத மே மாத ஊதியத்தை வழங்கிட வேண்டும்.
இதற்காக நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடவும் வேண்டும்."இவ்வாறு தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கி      ணைப்பாளர் சி செந்தில்குமார் தெரிவித்தார் .

தொடர்புக்கு :-
சி.செந்தில்குமார் 
மாநில ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு 
செல் : 9487257203

16 comments:

  1. Education department la ivanunga oru comedy teachers....

    ReplyDelete
    Replies
    1. PG assistant sir unga school ku vanthu patha unga comedy therium😀

      Delete
    2. Naga comedy mathiri theriuthu Ni eillam patithavana sir

      Delete
    3. Vaapa Benja thodaju thoongara teacher ah ne!

      Delete
  2. Atleast nagalachum indha department la comedy teachers nu oru place la irukom sir yena panitu irukiga

    ReplyDelete
  3. Replies
    1. Sir vip ah oru Vela education secretary posting kaga wait pandaragala.

      Delete
  4. Replies
    1. Yendha school la pg assistant sir.therijikalama yena government school teachers ku yega work pathi theriyum nega yendha school sir.

      Delete
    2. Pg assistant sir ifhrms la and emis la tc process la konjam doubts iruku konjam clear panamudiyuma sir

      Delete
  5. PG assistant sir unga school ku vanthu patha unga comedy therium😀😀😀

    ReplyDelete
  6. Pg assist salary nala vangaringala ena. Poduma

    ReplyDelete
  7. பகுதி நேர ஆசிரியர்களாகிய நாம் வாழ்வாதாரம் இழந்து ஒன்பது வருடங்களாக போராடும் போது இப்படிப்பட்டவர்கள் ஏன் குறுக்கே வருகிறார்கள்? இந்த ஆட்சியாளர்கள் இப்படி அருமையான வாரத்தில் மூன்று அரைநாள் மற்றும் 12 நாட்களுக்கு என்று மட்டும் ஒரு போஸ்ட் உருவாக்கி மற்ற நாட்களில் எங்கே வேலைக்குச் செல்வார்கள்? எப்படி இவர்கள் குடும்பம் நடத்துவார்கள் என்பது கூட தெரியாமல் இந்த சிறப்பான ஆசிரியர் பணியினைக் கொடுத்து குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டுவந்துள்ளார்கள். இவர்கள் போட்ட இந்த வேலைக்கு எவ்வளவு போராட்டம் செய்தும் 100 ரூபாய் கூட சம்பளம் ஏற்றாமல் வெறும் 7700 கொடுக்கிறார்கள். அதிலும் மே மாதம் சம்பளம் கிடையாது. இந்த சம்பளத்தை வைத்து என்ன செய்வார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகளுமா யோசிக்கக் கூடாது? ஆனால் பள்ளிகளில் உள்ள அனைத்து கணிப்பொறி வேலைகளையும் செய்வது யார் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் தெரியாமலா இருக்கின்றது? 16000 குடும்பங்களின் வாழ்க்கையில் இவர்கள் விளையாடுகிறார்கள். இவர்களின் வயிற்றில் அடிக்கும் அனைவரின் வாழ்க்கையும் நாசமாகப் போகட்டும். பகுதி நேர ஆசிரியர் வேலையில் உள்ள கிட்டத்தட்ட அனைவரும் அதிகப்படியான கல்வித் தகுதியில் பணியாற்றுபவர்கள் தான் என்பதை அரசிடம் கோரிக்கை வைப்பதை குறுக்கே புகுந்த கேலி செய்பவர்கள் உணர வேண்டும்.

    ReplyDelete
  8. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறினார்கள். மிகவும் கஷ்டப்பட்டு தேர்ச்சி பெற்றோம். 2013 -ல் தேர்ச்சி பெற்று தற்போது சான்றிதழ் காலாவதியாகப் போகிறது. இடையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் விரைவில் நிரப்பப்படும் விரைவில் நிரப்பப்படும் விரைவில் நிரப்பப்படும் விரைவில் நிரப்பப்படும் என்று மைக்கை நீட்டும்போதெல்லாம் கூறினார். ஆனால் நிரப்பப்படவே இல்லை இன்று வரை. இப்படி போட்டித் தேர்வுகளுக்கே படித்துக் கொண்டு இருந்தால் வாழ்க்கையை எப்படி ஓட்டுவது? தேர்ச்சி பெற்று என்ன பிரயோஜனம்... 2013-ல் தேர்ச்சி பெற்று காலாவதியாகப் போகிறது சான்றிதழ். கல்வித்துறை கைவிட்டு விட்டதா....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி