இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு : இணையவழி புத்தாக்கப் பயிற்சிTET நிபந்தனைகளிலிருந்து விலக்கு தந்து, விரைந்து அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2020

இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு : இணையவழி புத்தாக்கப் பயிற்சிTET நிபந்தனைகளிலிருந்து விலக்கு தந்து, விரைந்து அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு வேண்டுகோள்

இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு : இணையவழி புத்தாக்கப்  பயிற்சியை அளித்து, TET நிபந்தனைகளிலிருந்து விலக்கு தந்து விரைந்து அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு வேண்டுகோள்


RTE Act அடிப்படையில் 23/08/2010 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெறுபவர்கள் TET கட்டாயம் என்ற சூழல் உள்ளது.


தமிழகத்தில் RTE அமலாக்கம்  அரசாணை எண் 181 அடிப்படையில் இருந்தாலும், தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரின் 16/11/2012 ஆம் தேதியிட்ட செயல்முறைகள் அடிப்படையில் TET கட்டாயம் என்ற நிபந்தனைகள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.


அதனால் 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட சுமார் 1700 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் TET கட்டாயம் எனவும் , (அரசு பள்ளிகள் மற்றும் மைனாரிட்டி பள்ளிகள் ஆசிரியர்களுக்கும் TET தேவை இல்லை என்று கூறப்படுகிறது)


23/8/10 முதல் 16/11/12 வரையில் TET பற்றிய புரிதல் இன்றி பணி நியமனத்திற்கு அனுமதி அளித்த அனைத்து அதிகாரிகளினால், தற்போது வரை சுமார் 1700 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட சூழல் ஒருபுறம் இருக்க,

TET நிபந்தனைகளில் கொண்டு வரப்பட்ட ஆசிரியர்கள் ஏறக்குறைய பத்து ஆண்டுகள் பணிநிறைவு பெறும் சூழலிலும், இன்றும் மன வருத்தத்திலேயே பணிபுரிந்து வருகின்றனர்.


பல்வேறு சிக்கல்கள் நிறைந்த இந்த TET பிரச்சினைகளை களையும் விதமாகவும், பணியில் உள்ள (TET சிக்கலில் உள்ள) ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வண்ணம் தமிழக அரசு பாதுகாப்பு தரும் எனவும்,  அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அல்லது சிறப்பு தேர்வு விரைவில் நடத்தப்படும் எனவும் கடந்த பிப்ரவரி மாதம் மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்தார். அதன் பிறகுதான் இந்த TET சிக்கலில் இருந்த ஆசிரிய குடும்பங்கள் சற்றே நிம்மதியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆயினும் இன்று வரை முழுமையான அரசானை பிறப்பிக்கப்படவில்லை.


தற்போது 23/08/2010 முதல் 24/08/2020 வரையிலான காலகட்டம் மொத்தமாக பத்து ஆண்டுகள் நிறைவுற்றதால் தேர்வு நிலை ஆசிரியர்களாக தரம் உயர்கின்றனர்.

வளரூதியம், ஊக்க ஊதியம் உள்ளிட்ட ஊதியப் பலன்கள் நிறுத்தக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்தும் கூட, மாநிலம் முழுவதும் சமமற்ற முறையில் தரப்படுகின்றன.


பெரும்பாலான ஆசிரியர்களின் பதவி உயர்வுகள் தகவல்கள் இன்றி தேங்கி நிற்கின்றன. உயர்கல்வி படிக்ககூட அனுமதி மறுக்கப்படுவது உள்ளிட்ட பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர் இந்த TET நிபந்தனை ஆசிரியர்கள்.


ஆகவே விரைவில்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களும்  கொள்கை முடிவு  செய்து நல்ல அறிவிப்பு வெளிவிடும் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.


RTE - TET சிக்கல் சரிசெய்யும் பொருட்டு தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் உள்ள அனைவருக்கும்  விரைவில் Online மூலம், சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு   அளித்தது போல, TET புத்தாக்கப்பயிற்சி அளித்து TET லிருந்து முழுவதும் விலக்கு அளிக்க கொள்கை முடிவினை மாண்புமிகு தமிழக கல்வித் துறை அமைச்சகம்  மேற்கொண்டால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதுகாப்பு பெறும்." என TNASA தமிழக அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.


13 comments:

  1. Whatsapp group open aagala.how to join this link?

    ReplyDelete
  2. Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

    ReplyDelete
  3. 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தாள்-2ல் சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
    5000 நபர்களுக்கும் 2017 மற்றும் 19ல் 90 மதிப்பெண்களுக்கு மேல் தாள்-2ல் தேர்ச்சி பெற்ற சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
    5000 நபர்களுக்கும் முதல்கட்டமாக பணி நியமனம் வழங்கினால் மிக சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
  4. 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தாள்-2ல் சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
    5000 நபர்களுக்கும் 2017 மற்றும் 19ல் 90 மதிப்பெண்களுக்கு மேல் தாள்-2ல் தேர்ச்சி பெற்ற சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
    5000 நபர்களுக்கும் முதல்கட்டமாக பணி நியமனம் வழங்கினால் மிக சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. 2017 ல், மொத்த தேர்ச்சி எவ்வளவு?
      (தாள் 1 & தாள் 2)

      Delete
  5. இதுவே சரியான முடிவு. யார் கேட்பார்
    ஸ்டாலின் ஐயா பேசினால் நல்லது நடக்கும்.சென்னையில் இருக்கும் 2013 வெற்றி பெற்றவர்கள் நேரில் சென்று பேசவேண்டும்.யாரேனும் செய்வீர்களா?
    சென்னை வாசிகள்

    ReplyDelete
    Replies
    1. 2013 la pass pannavanga periya lord labakka....

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி