Breaking Now : தமிழகத்தில் இன்று ( ஆகஸ்ட் 28 ) மேலும் 5,996 பேருக்கு கொரோனா தொற்று - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2020

Breaking Now : தமிழகத்தில் இன்று ( ஆகஸ்ட் 28 ) மேலும் 5,996 பேருக்கு கொரோனா தொற்று


தமிழகத்தில் ( 27.08.2020 ) இன்று 5,996 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  4,03,242 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 1,296   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 496

செங்கல்பட்டு - 296

திருவள்ளூர் - 


மாவட்ட வாரியான பாதிப்பு.( 27.08.2020 )



மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,752


இன்றைய உயிரிழப்பு : 102

3 comments:

  1. தினமும் 50 பேரை பிடிச்சுட்டு வாங்க! கொரோனாவில் காசு பார்க்கும் அதிகாரிகள்!
    பதிவு செய்த நாள்: ஆக 27,2020 23:33

    சென்னை; 'கொரோனா பரிசோதனைக்காக தினமும், 50 பேரை கட்டாயம் அழைத்து வர வேண்டும்' என, களப் பணியாளர்களுக்கு, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

    இதன் வாயிலாக ஒரு நோயாளிக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு வகையில், 'பில்' கணக்கிடப்படுகிறது.சென்னையில் கொரோனா தொற்றை கண்டறிய, களப் பணியாளர்கள் வாயிலாக தடுப்பு நடவடிக்கைகளை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதன்படி, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


    ஆரம்பத்தில் இலக்கு நிர்ணயிக்காமல், தொற்று தடுப்பை மட்டுமே குறிக்கோளாக வைத்து, மாநகராட்சி செயல்பட்டு வந்தது.இதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஒருவருக்கு, பரிசோதனை செலவு, வீட்டில் தனிமைப்படுத்தலுக்கான செலவு, உணவு, மருந்து, மாத்திரை என, 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை, 'பில்' போட்டு, கணக்கு எழுதப்படுவதாக கூறப்படுகிறது. இதில், தங்களுக்கு பெரும் தொகை கிடைப்பதால், அதிகாரிகள், இலக்கு நிர்ணயித்து, கொரோனா நோயாளிகளை கண்டறியும்படி, களப் பணியாளர்களுக்கு, உத்தரவிட்டுள்ளனர்.இதன்படி, கொரோனா நோயாளிகளுக்கு மட்டும், 500 கோடி ரூபாய் வரை மாநகராட்சி செலவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இது குறித்து, மாநகராட்சி களப்பணியாளர்கள் கூறியதாவது:எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில், தினமும், 50 பேரை பரிசோதனைக்கு அழைத்து வர வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.அவ்வாறு, 50 பேரை அழைத்து வரவில்லை என்றால், அதிகாரிகள், எங்களை கண்டிப்பதுடன், அடுத்த மாதம் சம்பளம் கிடைக்காது என, மிரட்டுகின்றனர்.கொரோனா கண்டறியும் ஒரு நோயாளிக்கு, பரிசோதனைக்கு மட்டும், 6,000 ரூபாய் செலவு செய்யப்படுவதாக, 'பில்' போடப்படுகிறது.அதேபோல், வாகன செலவு, உணவு, மருந்து மற்றும் வீட்டில் தகரம் என, 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை, மாநகராட்சி அதிகாரிகள் செலவு செய்வதாக கணக்கு காட்டுகின்றனர்.

    இதன் காரணமாக, முதல்நிலை தொற்றுடன், எவ்வித அறிகுறியும் இல்லாத நோயாளியை கூட, வீட்டில் தனிமைப்படுத்தாமல், கொரோனா சிறப்பு மையத்துக்கு அழைத்துச் செல்ல வற்புறுத்துகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இது குறித்து, மாநகராட்சி சுகாதார நல அலுவலர் ஜெகதீசனிடம் கேட்டபோது, பதில் அளிக்க மறுத்து விட்டார்

    ReplyDelete
    Replies
    1. கொரொனாவிலும் ஊழ‌ல் செய்யும் கொடூர‌ ஆட்சியாள‌ர்க‌ள்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி