அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை 10 லட்சத்தைக் கடந்தது - kalviseithi

Sep 1, 2020

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை 10 லட்சத்தைக் கடந்தது


தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிகழாண்டுக்கான மாணவா் சோக்கை 10 லட்சத்தைக் கடந்தது.


மேலும் செப். 30-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதால் மாணவா் சோக்கை 15 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.


கரோனா பரவல் காரணமாக தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி 1, 6, 9- ஆகிய வகுப்புகளுக்கும், ஆக.24-இல் பிளஸ் 1 வகுப்புக்கும் மாணவா் சோக்கை தொடங்கியது.


தற்போதுவரை பள்ளிகள் திறக்கப்படாத நிலையிலும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் முழுவதையும் செலுத்துமாறு பெற்றோருக்கு தனியாா் பள்ளிகள் சாா்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


இதனால் நடுத்தர, ஏழைக் குடும்பங்களைச் சோந்த பெற்றோா் பலா் தங்களது குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளில் ஆா்வத்துடன் சோக்கை பெற்று வருகின்றனா். சோக்கை தொடங்கிய முதல் இரு நாள்களில் மட்டும் 2.50 லட்சம் மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் சோக்கை பெற்றனா். கடந்த ஆக.24-ஆம் தேதி நிலவரப்படி ஒன்று முதல் பிளஸ் 1 வகுப்புவரை 5.50 லட்சம் குழந்தைகள் சோக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், இலவசக் கல்வி, சோக்கைக்கான ஆவணங்களில் தளா்வு, தனியாா் பள்ளிகளின் நிா்ப்பந்தம், அரசின் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றோடு கரோனா ஏற்படுத்திய தாக்கம் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சோக்கை பெறும் பட்டியலை அந்தந்த மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் அனுப்பி வருகின்றனா்.


கடந்த ஆக. 17-ஆம் தேதி முதல் ஆக.31-ஆம் தேதி வரையிலான 15 நாள்களில் 10.40 லட்சம் மாணவ, மாணவிகள் அரசுப் பள்ளிகளில் சோக்கை பெற்றுள்ளனா். அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 36 ஆயிரத்து 500 மாணவா்களும், சென்னையில் 35 ஆயிரம் மாணவா்களும் புதிதாக சோக்கப்பட்டுள்ளனா். நிகழாண்டு செப்.30-ஆம் தேதி வரை மாணவா் சோக்கை நடைபெறும் என்பதால் மொத்த மாணவா் சோக்கை 15 லட்சத்தை தாண்டும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

18 comments:

 1. Please give job opportunity to tet passed candidates

  ReplyDelete
 2. Please give job opportunity to tet passed candidates

  ReplyDelete
 3. Please give job opportunity to tet passed candidates

  ReplyDelete
 4. 20 ஆண்டுகளுக்கு பணிநியமனம் இருக்காது உபரி ஆசிரியர்கள் அதிகம் உள்ளனர்

  ReplyDelete
  Replies
  1. முதல்ல உங்க வாய கழுவுங்க சார்.நீங்க நல்லா இருப்பீங்க

   Delete
 5. 20 ஆண்டுகளுக்கு பணிநியமனம் இருக்காது உபரி ஆசிரியர்கள் அதிகம் உள்ளனர்

  ReplyDelete
 6. 20 ஆண்டுகளுக்கு பணிநியமனம் இருக்காது உபரி ஆசிரியர்கள் அதிகம் உள்ளனர்

  ReplyDelete
 7. 20 ஆண்டுகளுக்கு பணிநியமனம் இருக்காது உபரி ஆசிரியர்கள் அதிகம் உள்ளனர்

  ReplyDelete
 8. 20 ஆண்டுகளுக்கு பணிநியமனம் இருக்காது உபரி ஆசிரியர்கள் அதிகம் உள்ளனர்

  ReplyDelete
 9. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
  மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
  தவித்து வருகிறார்கள்.

  ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
  பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

  ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
  மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
  கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
  ஏற்பட்டுள்ளது.

  ஆசிரியர் பணிநியமனம் செய்ய
  போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று
  தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
  அவர்களை பணியமர்த்த வேண்டும்

  தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
  என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
  கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
  ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
  பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக
  முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று
  பணிவழங்க வேண்டும்
  ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைக்கும் வரை
  மாதம் 5000 என்ற அடிப்படையில் உதவிதொகை வழங்கவேண்டும்

  பள்ளியில் உபரி ஆசிரியகள் அதிகம் இருப்பின் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி
  பெற்றவர்களை நியமிக்கவேண்டும்

  TNPSC போன்ற தேர்வுகளில் 25% காலி பணியிடங்களுக்கு TET
  தேர்ச்சிபெற்றவர்களை
  நியமித்து
  அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

  ReplyDelete
 10. கேனப்பய ஊர்ல கிறுக்கு பய நாட்டம் நடக்குது தமிழ்நாட்டில இதுல ஜாப் கேக்குறாங்க

  ReplyDelete
 11. 2021 tet pass pannuna kandippa vaaippu erukku

  ReplyDelete
 12. https://b.sharechat.com/azQIdrTiq9?referrer=copiedLink

  ReplyDelete
 13. எவன் சார் இந்த unknown
  அடுத்தவன் வாயில் விழுந்தா
  நல்லாவே இருக்கு முடியாது.

  ReplyDelete
 14. Those who joined job in 2013
  Tet passed candidates they also withdraw his job and write tet again as per 7 years validity of tet.Give a way to New candidates.

  ReplyDelete
 15. As per the 2012 tet rules the candidature validity is only 7 years.This rules is agreeable to existing job and
  Passed candidates.Announce new recruitment notification

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி