சிகரம் நம் உயரம் - இணைய வழி நிகழ்வில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2020

சிகரம் நம் உயரம் - இணைய வழி நிகழ்வில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

 


"சிகரம் நம் உயரம்"


இணைய வழி சிறப்புரை -அழைப்பு

மாணவ மாணவியர் அனைவருக்கும் இனிய வணக்கம்.

தற்போதைய உலகளாவிய கொரோனா தொற்றுக்காலத்தில் மாய இணைய உலகில் கல்விதனைக் கற்று வருகிறோம்.

இந்த சூழலில் அவ்வப்போது நமக்கு உத்வேகம் அளிக்கும் புத்துணர்வு நிகழ்வுகள் நடந்தேறிதான் வருகின்றன.

அதன் வழியில் அடுத்து ஒரு அற்புதமான நிகழ்வினை உங்களுக்கு அறிவிப்பதில் பெருமகிழ்வு அடைகிறோம்.

வரும் 17 செப்டம்பர் 2020   அன்று காலை 10.45 மணி முதல் - பகல் 12 மணிவரை இணைய வழி, YouTube  Link நேரலை வழியாக

"சிகரம் நம்  உயரம்"

என்ற தலைப்பில் மாபெரும் உத்வேக உரை நிகழ்த்தப்படவுள்ளது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் மொழியின் சீர்மிகு பேராளுமைப் பேச்சாளர், தமிழ் புயல் பர்வீன் சுல்தானா அவர்கள் எழுச்சி உரை நிகழ்த்தவுள்ளார்.

ROTARY CLUB OF COIMBATORE - (15840) முயற்சியின் வாயிலாக நடைபெறும் இந்த இணையவழி நிகழ்வு கட்டாயமாக தற்போதைய சூழலில் உங்களுக்கு நல்லதொரு நேர்வழித் தூண்டலைத் தரும் என்ற உறுதியுடன் இந்த பதிவின் மூலமாக நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

கீழ்காணும் YouTube link இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

சரியாக 17/09/2020 அன்று காலை 10.45 மணியளவில் இந்த Linkஐச் சொடுக்கி நேராக இந்த அற்புதமான நிகழ்வில் பங்கேற்கலாம்.




உங்கள் பள்ளி ஆசிரியர்களும் இந்த இணையவழி நிகழ்வில்  நீங்கள் பங்கேற்க உதவுவார்கள். மேலும் அவர்களும் பங்கேற்பார்கள்.

அழைப்பு விடுப்பில் மகிழ்வுடன்...
#கோவை மாவட்ட கல்வி அலுவலர்.

# SS குளம் - கல்வி மாவட்ட அலுவலர்,
கோவை.

# Rotary Club of Coimbatore / (3201-15840)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி