BE மேற்படிப்புகளுக்கான கேட் நுழைவுத் தேர்வு: நவ.13 வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2020

BE மேற்படிப்புகளுக்கான கேட் நுழைவுத் தேர்வு: நவ.13 வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம்

 


பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் நவ.13-ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று ஐஐடி மும்பை  அறிவித்துள்ளது.

ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கு கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 27 பாடப் பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

கேட் நுழைவுத்தேர்வை பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் அல்லது சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி  நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று ஆண்டுதோறும் நடத்தும். அந்த வகையில் இந்த ஆண்டு ஐஐடி மும்பை  தேர்வை நடத்துகிறது.

இந்நிலையில் 2021-22 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் நவ.13-ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று ஐஐடி மும்பை  அறிவித்துள்ளது.

மேலும் தேர்வு எழுதுவதற்கான நகரத்தை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் பாடப் பிரிவு, தாள், பாலினம் ஆகியவற்றைக் கூடுதல் கட்டணம் செலுத்தி மாற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி