CA தேர்வுத் தேதி அறிவிப்பு; நவ.1-ல் ஹால் டிக்கெட் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2020

CA தேர்வுத் தேதி அறிவிப்பு; நவ.1-ல் ஹால் டிக்கெட் வெளியீடு

 


இந்தியக் கணக்குக் தணிக்கையாளர் மையம் நடத்தும் சிஏ படிப்புகளுக்கான தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஹால் டிக்கெட் நவம்பர் 1-ம் தேதி வெளியாகிறது.

இந்தியக் கணக்குத் தணிக்கையாளர்  அமைப்பின் (ஐசிஏஐ) சார்பில் ஆடிட்டர்  பணிக்காக சிஏ எனப்படும் கணக்குத் தணிக்கையாளர் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கோவிட்-19 பரவல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. பிறகு பிஹார் தேர்தல் காரணமாக மீண்டும் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், சிஏ படிப்புகளுக்கான தேர்வுகள் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. சிஏ  அடிப்படை, இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகள் அனைத்தும் இந்தத் தேதிகளிலேயே நடைபெறும் என இந்தியக் கணக்குத் தணிக்கையாளர்  அமைப்பு அறிவித்துள்ளது

மேற்குறிப்பிட்ட தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் நவம்பர் 1-ம் தேதி வெளியாகிறது. கட்டுப்பாட்டு மையங்களில் வசிக்கும் மாணவர்கள், நவம்பர் 2020இல் இறுதித் தேர்வுகளை எழுத வேண்டி இருக்கும்பட்சத்தில், கட்டணம் செலுத்தியது, விண்ணப்பம் உள்ளிட்ட அனைத்தையும் மே 2021 ஆம் பருவத் தேர்வுக்கு மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் 10-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற உடனேயே சிஏ படிப்புக்குப் பதிவு செய்யும் வகையில், இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் மையம் விதிகளைத் திருத்தி அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி