டிச. 5, 6 (சனி, ஞாயிறு) நெட்ஃபிளிக்ஸில் அனைத்தும் இலவசம்! - kalviseithi

Nov 20, 2020

டிச. 5, 6 (சனி, ஞாயிறு) நெட்ஃபிளிக்ஸில் அனைத்தும் இலவசம்!

 


பிரபல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், இந்தியாவில் வருகிற டிசம்பர் 5, 6 தேதிகளில் இலவச சேவை வழங்குவதாக அறிவித்துள்ளது. 


அதன்படி, இந்தியாவில் உள்ள எவரும் டிசம்பர் 5 நள்ளிரவு 12 மணி முதல் டிசம்பர் 6 இரவு 12 மணி வரை இரு நாள்களுக்கு நெட்ஃபிளிக்ஸை இலவசமாக பயன்படுத்தலாம். மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்கள், தொடர்கள், விருது பெற்ற ஆவணப்படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களைப் பார்க்கலாம்.


வார இறுதி நாள்களில் அனைத்து பயனர்களும் பயன்பெறும் வகையில் இலவச சேவை வழங்கப்படும் என கடந்த மாதம் நெட்ஃபிளிக்ஸ் அறிவித்தது. அதன்படி,  நாட்டில் உள்ள அனைவருக்கும் வார இறுதியில் இலவச சேவை வழங்குவதன் மூலம் எங்கள் சேவையின் தரம் குறித்து முழுவதுமாக பயனர்கள் அறிந்துகொள்ள முடியும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரெக் பீட்டர்ஸ் தெரிவித்தார். 


இந்த இலவச சேவையைப் பெற பயனர்கள் netflix.com/StreamFest என்ற தளத்தைக் காணவும். உங்கள் பெயர், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் மற்றும் கடவுச்சொல்லுடன் பதிவு செய்து பயன்பெறலாம் என நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி