தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2020

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை



 தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் 10 உதவி பொறியாளர்(சிவில்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விளம்பர எண்.A2/78/2018


பணியிடம்: சென்னை


பணி: Assistant Engineer(Civil)


காலியிடங்கள்: 10


சம்பளம்: மாதம் ரூ.36,400 - 1,15,700


தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் அல்லது சிவில் மற்றும் கட்டமைப்பு பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகையை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


பதிவு கட்டணம்: அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.400 செலுத்த வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்:  எசி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களும் தேர்வு கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.


தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: www.tahdco.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2010

 

மேலும் விரிவான விவரங்கள் அறிய https://tahdco.onlineregistrationform.org/TAHDCODOC/Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி