2018ம் ஆண்டு TET தேர்வே நடக்கவில்லை - ஆசிரியர்கள் நியமனம் குறித்து அமைச்சர் அறிவிப்புக்கு தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் கண்டனம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2020

2018ம் ஆண்டு TET தேர்வே நடக்கவில்லை - ஆசிரியர்கள் நியமனம் குறித்து அமைச்சர் அறிவிப்புக்கு தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் கண்டனம்.


2018 ம் ஆண்டு தகுதி தேர்வே நடத்தாமல் , ஆசிரியர் நியமனம் நடைபெறும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளது கேலிக் கூத்தாக உள்ளது என தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது. 

கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று முன்தினம் கோபிச் செட்டிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் , 2018 ல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வழக்கம் போல் வெளியிட்டார். அமைச்சரின் அறிவிப்பை கேட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். காரணம் கடந்த 2018 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வோ அல்லது முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வோ தமிழகத்தில் நடைபெறவில்லை.

அமைச்சரின் அறிவிப்பு அர்த்தமற்று உள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து , 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்க மாநில ஒருங் கிணைப்பாளர் இளங்கோவன் கூறுகையில் , 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று ஏறக்குறைய 80 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த ஏழாண்டுகளாக அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம் . இரண்டாண்டுகளுக்கு முன் பள்ளிகல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு வாரத்தில் பணி வழங்கப்படும் என கூறினார். ஆனால் இது வரை எந்த பணி நியமனமும் மேற்கொள்ளவில்லை. இதை தவிர இவர் அறிவித்த பல அறிவிப்புகள் முன்னுக்குப்பின் முரணாகவே இருந்து வருகிறது. 


இவ்வாறு இருக்கையில் , தற்போது 2018ம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு ஓரிரு நாளில் பணி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருப்பது கேலிகூத்தாக உள்ளது. ஏனென்றால் 2018ம் ஆண்டு ஆசிரியர் தகு தித்தேர்வோ நடத்தப்பட வில்லை என்பதுதான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார் .

33 comments:

  1. Ada vidungappa! Avaruka puriyala! Nama enga irukkruminnu!

    ReplyDelete
    Replies
    1. dei ilangova nala katharuda..iunkm vadivelu and pprabakaran matum postinge kidaikathu

      Delete
  2. SOOOOPPER MINISTER. VELANGIDUM. KALVITHURAIYIL MUNNODI STATE...

    ReplyDelete
  3. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு..
    அமைச்சர் செங்கோட்டையன்.

    அப்படி ஒரு நல்ல மனம் உள்ளது என்றால் ஏன் ஆளும் போது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு ஆசிரியருக்கு கூட பணி வழங்கவில்லை?

    ReplyDelete
  4. Poothaiyila olari eruppan vidunga gi.

    ReplyDelete
  5. 2013 batch mattum posting venumnu kekathinga ungalukku already posting potachu 2017 2019 batch tet passed candidates oru posting kuda podala.weightage LA pathikka pattalum 2013 ku preference kuduthu2017 2019 tet pass panavagalukkum posting venumnu kekrathu than nayam. Or otherwise competition exam is better for knowledgeable teacher

    ReplyDelete
  6. 2013 batch mattum posting venumnu kekathinga ungalukku already posting potachu 2017 2019 batch tet passed candidates oru posting kuda podala.weightage LA pathikka pattalum 2013 ku preference kuduthu2017 2019 tet pass panavagalukkum posting venumnu kekrathu than nayam. Or otherwise competition exam is better for knowledgeable teacher

    ReplyDelete
  7. 2013 batch mattum posting venumnu kekathinga ungalukku already posting potachu 2017 2019 batch tet passed candidates oru posting kuda podala.weightage LA pathikka pattalum 2013 ku preference kuduthu2017 2019 tet pass panavagalukkum posting venumnu kekrathu than nayam. Or otherwise competition exam is better for knowledgeable teacher

    ReplyDelete
    Replies
    1. Why kaasi neenga 2017 batch... Apdina kandipa wait pannunga. 2024 la kidaikum.

      Delete
  8. எனக்கு தெரிஞ்சி 90 மேல்எடுத்தவர்களுக்கு வாய்ப்பு இருக்கும் னு நெனைக்குறன். யார்னா தெரிஞ்சா சொல்லுங்க 2013,17,19 ல் எத்தனை பேர் 90‌மேல் இருப்பார்கள் என்று

    ReplyDelete
    Replies
    1. TRT 100℅ no chance above90 we will get posting sure

      Delete
  9. அட கேன பயமகனே

    ReplyDelete
  10. அட முட்டாள் கூ....

    ReplyDelete
  11. TET க்கு UG TRB நிச்சியம் உண்டு அனைவரும் படிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. Syllabus இல்லாமல் எப்படி படிப்பது நண்பா

      Delete
    2. UG trb vantha semaya irukum nanba varuma

      Delete
  12. Avar sonnathu TRB candidate kitta..
    News channela kaaran thappa pottan...

    ReplyDelete
  13. We are waiting for job but he is always telling alosanai kuttam . when teachers are getting the job good only know.

    ReplyDelete
  14. G o 149: competitive exam pottathu

    ReplyDelete
  15. வேலை வாய்ப்பு கிட்டதாவர்கள்
    செங்கோட்டையன் சார் தொகுதியில் வேலை பாருங்கள்....

    ReplyDelete
  16. minister validity innum 2 month only.adhu innum puriyala appuram avaru enga posting podaradhu...wait dear bed completed candidtes and tet pass candidates DMK only solve our problem vote for DMK.

    ReplyDelete
    Replies
    1. DMK Sema fraud ivanungale pathi thirudan DMK muzhu thirudananko si yar vanthalum ethum nadakathu asiriyar samuthayam pulampitte iruka vendiyathu than

      Delete
    2. இவனுங்க பாதி திருடன் இல்லை .....திருட்டின் முழு உருவம் admk...... dmk பரவாயில்லை

      Delete
  17. Announce new recruitment for pg those who miss an opportunity in 2019.Due to overcome max strength HsC in govt schools.

    ReplyDelete
  18. இவனுக்கு முதல்ல தகுதி தேர்வு வைக்கனும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி