B.Ed சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: டிச.10 கடைசித் தேதி- உயர் கல்வித்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2020

B.Ed சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: டிச.10 கடைசித் தேதி- உயர் கல்வித்துறை அறிவிப்பு.

 


அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளங்கலைக் கல்வியியல் (B.Ed.) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாகப் பதிவு செய்யலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உயர் கல்வித்துறை  அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:



''அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலைக் கல்வியியல் (B.Ed.) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாகப் பதிவு செய்யலாம். 04-12-2020 முதல் 10-12-2020 வரை www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்தப்பட வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.250 மட்டும் செலுத்தினால் போதுமானது.

மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தெரிவு செய்தல் வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும்போது தங்களின் சான்றிதழ்களை www.tngasaedu.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்தக் கல்லூரிகளில், என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள் www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளன.

இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணாக்கர்கள் 044-22351014, 044-22351015 மற்றும் 044-28278791 என்ற எண்ணிற்குக் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம்.

இது தொடர்பாக care@tngasaedu.org  மற்றும் tndceoffice@gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலமாகவும் மாணாக்கர்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெறலாம்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. TET பாஸ் பண்ணவங்களுக்கே வேலை கிடைக்கல

    ReplyDelete
  2. எதற்காக இந்த படிப்பு. ஒரு கணம் சிந்திக்கவும்

    ReplyDelete
  3. அட வெக்கங் கெட்டவங்களா.... வேல குடுக்கத் துப்பில்ல... ஆனா வருஷா வருஷம் அட்மிஷன்னு ஆள் புடிக்க வந்திர்ரானுக. இதுக்கு எதுக்குடா வெள்ளையுஞ் சொல்லையுமா அலையிறீங்க....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி