PGTRB - ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் இல்லை': முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்களால் பரபரப்பு..!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2020

PGTRB - ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் இல்லை': முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்களால் பரபரப்பு..!!



 சென்னை பசுமைவழி சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை ஆசிரியர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 2144 பேரில் 329 பேருக்கு மட்டும் இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் வேதியியல் பிரிவில் தேர்வானவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்களில் 40க்கும் மேற்பட்டோர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சென்னை வந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கக்கோரி சென்னையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து முதல்வரின் தனிப்பிரிவு அலுவலர்களிடம் 2 ஆசிரியர்கள் மட்டும் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். 

முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் ஏற்கனவே அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக CTET எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நடத்தி வருகின்றது. இதேபோல் மாநிலங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் சார்பில் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர் பணி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

32 comments:

  1. TET pass பண்ணவங்க இல்ல PG TRB chemistry pass பண்ணவங்க sir

    ReplyDelete
  2. Admin sir news sariyaga purindthu athai thelivaga kuripidavum.... Tet news

    ReplyDelete
  3. முதுகலை வேதியியல் தேர்வில் 2019
    இல் தேர்ச்சி பெற்றவர்கள் not tet

    ReplyDelete
  4. பட்டதாரி ஆசிரியர் பணி வழங்க போவதாக தகவல் உண்மையாக கருக்குமா?

    ReplyDelete
  5. All tet pass candidate follow same way

    ReplyDelete
  6. Admin please look at the title. Irrelevant one

    ReplyDelete
  7. Part time teachers naga irukom
    Part time teachers ku help panuga pls 🥺🥺🥺🥺

    ReplyDelete
  8. 😆😆😆😆😆 admin 😆😆😆😆😚

    ReplyDelete
  9. பணம் இருக்கிறவர்களுக்கு மட்டுமே
    எந்த ஆட்சியிலும் வேலை உண்டு.
    திறமை உள்ளவர்களுக்கு வேலை கிடையாது.
    4000 பேருக்கு வேலை உண்டு என்றால்
    4000 மேல் 8000 க்குள் தரம் (Rank) மதிப்பெண் எடுத்தவர்களே உண்மையான திறமையளர்கள்.
    முதல் 4000 நபர்களில் 200 நபர் மட்டுமே
    பணம் இன்றி பணி வாய்ப்பு பெறுகிறார்
    கள். அதுவும் கண் துடைப்பு வேலை.

    ReplyDelete
  10. உங்கள் உடைய வெப் விசிட் பாக்க வேண்டும் என்று உண்மை இல்லாத ஒரு செய்தியை பரப்ப வேண்டாம் பிளீஸ் எங்கள் உடைய வலி உங்களுக்கு தெரியாது....

    ReplyDelete
  11. Kalvi seithi admin actual ah cm sir home la manu kuduka poirupaga adha mutrugai poratama avar home la yelam kutmadha irupga

    ReplyDelete
  12. PG TRB CHEMISTRY பணி நியமனம் விரைவில் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ReplyDelete
  13. Pg second list will come anybody say please

    ReplyDelete
  14. 2013,2017,2019 tet passed candidates ku certificate permanent aguma

    ReplyDelete
  15. When we expect chemistry counciling

    ReplyDelete
  16. When we expect pg chemistry counciling..,

    ReplyDelete
  17. When we expect pg chemistry counciling

    ReplyDelete
  18. When PG trb chemistry 2019 counselling sir?

    ReplyDelete
  19. When PG trb computer instructor counselling?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி