Flash News : High School to Hr Sec School Upgradation - School List Published - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2021

Flash News : High School to Hr Sec School Upgradation - School List Published


GO NO : 11 , DATE : 18.01.2021

ஆணை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , 13.03.2020 அன்று சட்டமன்றப் பேரவை விதி 110 - இன்கீழ் பள்ளிக் கல்வித்துறை சார்ந்து பிறவற்றினிடையே பின்வரும் அறிவிப்பினை அறிவித்துள்ளார் : 

" 30 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும் . இப்பள்ளிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் 55 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும் , தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 21 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவிலும் ஏற்படுத்தப்படும் " 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , 20.03.2020 அன்று சட்டமன்றப் பேரவை விதி 110 - இன்கீழ் பள்ளிக் கல்வித்துறை சார்ந்து பிறவற்றினிடையே பின்வரும் அறிவிப்பினை அறிவித்துள்ளார் . " ஏற்கனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக , 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் , மேலும் , 30 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 உயர்நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாகவும் , வரும் கல்வியாண்டில் உயர்த்தப்படும் ".

 பள்ளிக் கல்வி இயக்குநர் தனது கடிதத்தில் , தமிழகத்தில் உள்ள அனைத்து வயது பள்ளி குழந்தைகளும் மேல்நிலைக் கல்வி வரை தொடர்ந்து படிப்பதை உறுதி செய்யவும் , பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்தவும் , 2020-2021 - ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி 50 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தி ஆணை வழங்குமாறும் , அப்பள்ளிகளுக்குத் தேவையான பணியிடங்கள் ஒப்பளிப்பு செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். 

பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து , முதற்கண் 40 உயர்நிலைப் பள்ளிகளை , மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்திடலாம் என முடிவு செய்து அவ்வாறே பின்வருமாறு அரசு ஆணையிடுகிறது : 

2020-21 - ஆம் கல்வியாண்டில் இவ்வாணையின் இணைப்பில் உள்ள / நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படுகிறது.

High School to Hr Sec School Upgradation - School List.pdf

7 comments:

  1. நன்றிகள் கல்விச்செய்தி

    ReplyDelete
  2. முதுகலை வரலாறு ஆசிரியர் பாடத்திற்கு என்றே சிறப்பான ஒரு பயிற்சி மையம்

    புத்தா அகாடமி,

    மேலும் விவரங்களுக்கு

    புத்தா அகாடமி
    இடம்: பிஷப் ஹவுஸ்
    ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரில், தருமபுரி.
    +91 9962027639 / +91 8838072588

    ReplyDelete
  3. எரிகின்ற வீட்டில் பிடிங்கியது லாபம்

    ReplyDelete
  4. வடக்கு (தொண்டை மண்டலம்)
    சென்னை-0
    கடலூர்-1
    காஞ்சிபுரம்-0
    செங்கல்பட்டு-1
    திருவள்ளூர்-5
    திருவண்ணாமலை-3
    வேலூர்-1
    விழுப்புரம்-0
    கள்ளக்குறிச்சி-1
    திருப்பத்தூர்-1
    இராணிப்பேட்டை-1
    Total=14

    மத்தி (சோழ மண்டலம்)
    அரியலூர்-2
    மயிலாடுதுறை-0
    நாகப்பட்டினம்-1
    பெரம்பலூர்-0
    புதுக்கோட்டை-1
    தஞ்சாவூர்-0
    திருச்சிராப்பள்ளி-1
    திருவாரூர்-0
    Total=5

    மேற்கு (கொங்கு மண்டலம்)
    தருமபுரி-2
    திண்டுக்கல்-2
    கோயம்புத்தூர்-4
    கரூர்-1
    ஈரோடு-4
    கிருட்டிணகிரி-1
    நாமக்கல்-0
    நீலகிரி-1
    சேலம்-2
    திருப்பூர்-2
    Total=19

    தெற்கு (பாண்டிய மண்டலம்)
    கன்னியாகுமரி-0
    மதுரை-1
    இராமநாதபுரம்-0
    சிவகங்கை-1
    தேனி-0
    தூத்துக்குடி-0
    திருநெல்வேலி-0
    தென்காசி-0
    விருதுநகர்-0
    Total=2



    ReplyDelete
    Replies
    1. அரசியல் எப்படி இருக்கு பாருங்க

      Delete
  5. This individual ought to have a strong foundation and the right accreditations to deal with your case. Learn about these subtleties on the web or on a book then, at that point, begin searching for lawyers accessible. medical malpractice lawyers free consultation
    lawyers specializing in medical malpractice

    ReplyDelete
  6. Preceding the Internet the primary non-Internet promoting choice or publicizing decision for any legal advisor was to promote in the business directory. lawyers specializing in medical malpractice
    slip and fall attorneys

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி