Flash News : 9, 10, 11 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி - முதல்வர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2021

Flash News : 9, 10, 11 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி - முதல்வர் அறிவிப்பு.


தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில், 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.



தமிழக சட்டப்பேரவையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.


கடந்த ஆண்டும் மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.


கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் திறக்கப்பட்டன. குறிப்பாக பொதுத் தேர்வெழுதும் 12 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதத்திலும், 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டன.


இந்த நிலையில், தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை மாணவர்களும் பள்ளிகளும் அதிகம் எதிர்பார்த்திருந்தன.


இது குறித்த இறுதி முடிவை தமிழக முதல்வர்தான் எடுப்பார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனும் கடந்த வாரம் கூறியிருந்தார்.


இது தொடர்பான ஆலோசனைகளும் நடத்தப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள்  தேர்வெழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.

13 comments:

  1. PG TRB 2021
    ALL SUBJECTS COACHING

    Each Subject Handling By 3 Efficient Faculties

    contact:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

    ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Science

    இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

    REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

    Hostel Available
    For Admission:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

    ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

    ReplyDelete
  2. Election na kooda cancel pannitu next five years ku neengale irunthukonga y na tamilnadu seekiram munneranum athan

    ReplyDelete
  3. Exam nerunkumbothu inform panniruklaam.athu varaikum students padichrupanga...but now ...ini schoolke vara mattanga.

    ReplyDelete
    Replies
    1. Unmai .but ivanga student kaga va pannanga election than motive.fulla varave mudiyatha pothu all state la yum passed potta piragu yositha ivanga ippo enna avasaram pls friend yosinga

      Delete
  4. பணி நியமனம் பற்றி ஏதாவது பேசினார்களா?

    ReplyDelete
  5. No change for tet passed catidats

    ReplyDelete
  6. Padithavarkalukku mattume kalviyin arumai theriyum..

    ReplyDelete
  7. கூமுட்டைகள் ஆட்சியில் இருந்த இப்படி தான் நடக்கும்.

    ReplyDelete
  8. படிப்பறிவு உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு கடைசியாக்கிய பெருமை இந்த ஆட்சியில் தான். பள்ளி தேர்வு நடத்த தெரியாத இந்த ஆட்சியாளர்கள் நாட்டை எப்படி வழிநடத்துவார்கள் ஆள தெரியாத தலைவன் இருக்கும் நாட்டில் மக்கள் முட்டாள் தான் இருக்க வேண்டும்

    ReplyDelete
  9. சிறப்பான செயல் ...நன்றி....முதல்வர் ஐயா...வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  10. தமிழ் medium case result வந்த piragum இன்று வரை சிறப்பாசிரியர்கள் தமிழ் வழியில் உள்ளவர்களை பணி நியமனம் செய்யாமல் இருப்பது ஏன்?,,,,,,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி