TNPSC study material! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2021

TNPSC study material!


நடப்பு நிகழ்வுகள்

சர்வதேசச் செய்திகள் 

ஆசியா - பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இணையவுள்ள ஐக்கிய ராஜ்ஜியம்.

ஐக்கிய ராஜ்ஜிய அரசாங்கமானது விரிவான மற்றும் முற்போக்கான டிரான்ஸ் பசிபிக் கூட்டுறவில் சேரவுள்ளது 

இது உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக கூட்டாண்மைகளுள் ஒன்றாகும் . 

இது பசிபிக் பகுதியில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் 11 பொருளாதாரங்களால் ஆனது . 

கடந்த ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி ஐக்கிய ராஜ்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது . 

பொருளாதாரச் செய்திகள் 

அபாய நேர்வு அடிப்படையிலான உள் தணிக்கை.

ரிசர்வ் வங்கியானது அபாய நேர்வு அடிப்படையிலான ஓர் உள் தணிக்கை முறையை ( risk - based internal audit system ) அறிமுகப் படுத்தியுள்ளது . 

தேர்ந்தெடுக்கப்பட்ட சில வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளுக்கு இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது . 

இதன் விதிமுறைகளின்படி , 5,000 கோடி ரூபாய் மதிப்பு சொத்து கொண்டுள்ள , வைப்புத் தொகையைப் பெறும் அனைத்து வங்கி சாரா நிதி நிறுவனங்களும் இந்த முறையைச் செயல்படுத்த வேண்டும் . 

இந்த முறை 2022 ஆம் ஆண்டின் மார்ச் 21 ஆம் தேதிக்குள் செயல்படுத்தப்பட வேண்டும் . 

சுற்றுச்சூழல் செய்திகள் 

கலிவேலி சதுப்புநிலங்கள் - பறவைகள் சரணாலயம் 

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் , 1972 என்ற சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கலிவேலி சதுப்புநிலங்களைப் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கும் முயற்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது .

இது சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்கான அவர்களின் முயற்சிகளை அதிகரிக்கச் செய்யும் . 

கலிவேலி சதுப்புநிலங்கள் தென்னிந்தியாவில் இரண்டாவது மிகப் பெரிய உவர்நீர் ஏரியாகும் . 

முதலாவது மிகப் பெரிய உவர்நீர் ஏரி புலிகாட் ஏரியாகும் . 

கலிவேலி ஏரியானது வங்காள விரிகுடாவோடு உப்புக் கள்ளி சிற்றோடை மற்றும் இடையந்திட்டு சரணாலயம் வழியாக இணைக்கப்பட்டுள்ளது . இந்தச் சதுப்புநிலத்தின் தெற்குப் பகுதியானது 2001 ஆம் ஆண்டில் ஒரு பாதுகாக்கப் பட்ட நிலமாக அறிவிக்கப்பட்டது.

February 2021 Current Affairs.            Shankar IAS Academy.

Touch Here

11 - ஆம் வகுப்பு உயிரியல் ( புதிய பாடத்திட்டம் ) ஆயக்குடி பயிற்சி மையம்

Touch Here

New book 9th 3rd term 25 + 25 Questions and Answers

Touch Here

TNPSC _ History & Geo Boxes           Important pdf...

Touch Here




1 comment:

  1. PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி