உடல்நலக்குறைவான ஆசிரியர்களை தேர்தல் பணிக்கு அழைத்து மிரட்டும் அதிகாரிகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2021

உடல்நலக்குறைவான ஆசிரியர்களை தேர்தல் பணிக்கு அழைத்து மிரட்டும் அதிகாரிகள்!

தேர்தல் பணிக்கு வருமாறு நோய்தாக்கமுற்ற ஆசிரியர்களை கல்வித்துறையினர் கட்டாயப்படுத்துவதாக புகார் தெரிவித்து ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப் , 6 ம் தேதி நடக்கிறது , தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் அலுவலர் பணிகளுக்கு ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியது . அதன் படி ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலகங்களிலும் , அரசு ஊழியர்கள் அவர்கள் பணியும் உயர் அதிகாரிகளிடமும் விண்ணப்பித்துள்ளனர். உடல் நலக்குறைவு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக தேர்தல் பணியில் பங்கேற்க முடியாத ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் அதற்கான ஆவணங்களை காட்டினால் அவர்களுக்கு - தேர்தல் பணியில் விலக்கு | அளிக்குமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக விண்ணப்பிக்க வேண்டும் என கூறியதன் பேரில் அனைத்து ஆசிரியர்களும் விண்ணப்பித்திருந்தனர். தற்போது விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு கல்வித் துறை மூலம் அரசாணை வழங்கப்பட்டுவருகிறது.



5 comments:

  1. Nalla irukura techers sick nu op adikrapo athikarikal enna seiya mudium

    ReplyDelete
  2. Unmaiyanakaranangal.irundhal.vilakualikavendum.

    ReplyDelete
  3. Salary இல்லைனு சொல்லட்டும் அப்புறம் பாருங்க. எப்ப பார்த்தாலும் ஆசிரியர்களுக்கு இதே வேலை.

    ReplyDelete
  4. எனக்கு தெரிந்து நிறைய பேர் வேண்டுமென்றே போலி சான்றிதழ் கொடுத்து ஏமாற்றுகிறார்கள் .. இவர்களை எல்லாம் பணியிடை நீக்கம் செய்தால் தான் சரி வரும்... தனியார் பள்ளி ஆசிரியர்கள் தைரியமாக வரமுடியாது என கூறுங்கள்.. அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றுவது தனியார் பள்ளி ஆசிரியருக்கு சுமையாக உள்ளது..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி