இந்த ஆண்டு வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தும் பணியாளர்களின் தேவை அதிகரிப்பு - மாவட்ட தேர்தல் அலுவலர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2021

இந்த ஆண்டு வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தும் பணியாளர்களின் தேவை அதிகரிப்பு - மாவட்ட தேர்தல் அலுவலர்.

 தஞ்சாவூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் கடிதத்தின் படி , எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 ஐ முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் பயிற்சி வகுப்பு 13.03.2021 அன்று நடைபெற்றது. அப்பயிற்சி வகுப்பில் இணைப்பில் காணும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தும் பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தேர்தல் பணி ஆணை பெற்ற அனைவரும் எதிர்வரும் தேர்தல் பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது. எனவே மேற்படி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் 26.03.2021 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொள்ள  அறிவுறுத்தப்படுகிறது. 


மேலும் தேர்தல் பணியினை தொடர்ந்து புறக்கணிக்க நேரிடின் அவ்வலுவலர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 ஐ மீறியதாக கருதப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும் என தஞ்சாவூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டுள்ளது , எனவே 13.03.2021 அன்று பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத பட்டியலில் காணும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களிடம் இணைப்பில் காணும் உறுதிமொழிப் படிவத்தினைப் பூர்த்தி செய்து 23.03.2021 அன்று மாலைக்குள் பெற்று தொகுப்பறிக்கையினை இவ்வலுவலகத்தில் ஒப்படைத்திட மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . பள்ளிக்கல்வித்துறை சார்பாக இப்பணியினை மாவட்டக்கல்வி மாவட்டக்கல்வி , அலுவலகத்திலும் , தொடக்கக்கல்வித்துறை சார்பாக இப்பணியினை வட்டாரக்கல்வி அலுவலகத்திலும் மேற்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



3 comments:

  1. Special teacher PET drawing tailoring tamil medium posting podunga

    ReplyDelete
  2. List மட்டும் இப்போதைக்கு அனுப்பங்க

    ReplyDelete
  3. Process poitu iruku,,,,cm cell ku pesinalum processing,,,,trb ku pesinalum processing,,,,,,,கடவுளே சிறப்பாசிரியர்கள் தேர்வு எழுதி 4 வருடம் கடந்து விட்டது,,,,,, processing, processing, processing, processing, processing, processing,,,,,,வழக்கு,,, Corona,,,144,,,,no school open,,,,marupadiyum processing, processing, processing, processing, processing,,,,,trb மற்றும் முதலமைச்சர் cell,,,,இப்படியே பேசி,பேசியே மன உளைச்சலை ஆனது தான் மிச்சம்,,, trb வாழ்க,,,,cm sir வாழ்க,,,,செங்கோட்டையன் sir வாழ்க,,,,,தமிழ் வழியில் படித்தவர்கள் வேதனை பட்டு சாகனும்,,,,,,எல்லாரும் நல்லா இருங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி