பள்ளிக் கல்வித்துறையில் 6156 தற்காலிக பணியிடங்களுக்கும், ஆசிரியர் பணியில்லா பணியிடங்களில் பணியாற்றும் 5000 பேருக்கும் மே மாத ஊதியம் வழங்க கொடுப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கவித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு, நகராட்சி, உதவி பெறும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் உள்ள 6156 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணியல்லாத பணியிடங்களுக்கு இறுதியாக 2018 முதல் 2020 வரை உள்ள 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
மேற்காணும் இந்த பணியிடங்களில் 1.1.2021 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளார். மேலும் ஏப்ரல் மாதத்துக்கான ஊதி கொடுப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு 2021 மே மாதத்துக்கு ஊதியம் பெறத்தக்க வகையில் ஊதிய கொடுப்பாணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் கருத்துரு அனுப்பியுள்ளார். தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்ட தற்காலிக பணியிடங்களுக்கு 1.1.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு வழங்குவது குறித்த பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், 6156 பணியிடங்களுக்கு 2021 மே மாதத்துக்கான ஊதியம் பெற்று வழங்க வசதியாக ஊதிய கொடுப்பாணை வழங்கப்படுகிறது.
மேலும், பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு 31.12.2020ல் முடிவடைந்த நிலையில் அந்த பணியிடங்களில் பணியாற்றி வரும் 778 துப்புரவாளர்கள், 494 இரவுக்காவலர்கள் என மொத்தம் 1272 பணியாளர்களின் பணியிடங்களுக்கு மட்டும் 1.1.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கோரிக்கையை ஏற்று அரசாணை 47ன் தொற்றுவிக்கப்பட்ட 2999 துப்புரவாளர் பணியிடம் மற்றும் 2001 காவலர் பணியிடம் என மொத்தம் 5000 பணியிடங்களில் 1270 பணியாளர்கள் 2021 மே மாதம் ஊதியம் பெறத் தக்க வகையில் ஊதிய கொடுப்பாணை வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Part time teachers may month salarey,CM,sir
ReplyDeleteWhat about private college Professor
ReplyDeleteConsider to private school teachers sir....we are also make a Good citizens in our society sir
ReplyDeleteConsider to private school teachers sir....we are also make a Good citizens in our society sir
ReplyDeletePls consider parttime teacher may month salary because our life so critical sitution.12,000 parttime teacher are face all the sitution back of year.Now all of us face the critical sitution.elsespecially we are so,so critical position in this "covid-19" time.so consider to give salary for this month & permanent as regular like all the teacher this is gave one of the position to gave respect,spirit in the world.pls take quick action sir.i request to eduction minister to (anbil pooiya mozhi)
ReplyDeleteSd by A.malarmathi
ReplyDelete