CPS ஜூன் 3-ல் ரத்தா? சங்கங்களின் வாட்ஸ்அப் செய்தியால் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் மகிழ்ச்சி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2021

CPS ஜூன் 3-ல் ரத்தா? சங்கங்களின் வாட்ஸ்அப் செய்தியால் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் மகிழ்ச்சி!

 கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி சி.பி.எஸ் . ரத்து செய்யப்ப டும் அறிவிப்பு வெளியாக உள்ளதாக , அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.


இந்த தகவல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தி.மு.க. , தேர்தல் அறிக்கையில் தி.மு.க. , ஆட்சிக்கு வந்தால் சி.பி.எஸ் . திட்டம் ரத்து செய்யப்பட்டு , பழைய ஓய்வூதியம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


கடந்த 2003 ம் ஆண்டுக்கு பின்னர் சி.பி.எஸ் . திட்டம் இருப்பதால் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். அரசு ஊழியர் கள் , ஆசிரியர்கள் போராட்டத்தில் பிரதான கோரிக்கையாக , இந்த கோரிக்கைதான் இடம் பெற்று வந்தது.


இந்நிலையில் , தி.மு.க. , தலைவர் ஸ்டாலின் முதல் வராக பதவி ஏற்றவுடன் தேர்தல் அறிக்கையில் உள்ள கோரிக்கைகள் ஐந்தினை நிறைவேற்ற , முதல் உத்தரவில் கையெழுத்திட்டார். அதில் ஒரு திட்டமான , அரசு டவுன்பஸ்களில் பெண்கள் இலவசமாக செல்லும் திட்டம் நேற்று அமலுக்கு வந்து , மகளிர் மத்தியில் கடும் வரவேற்பை பெற்றது. 


இந்நிலையில் , நேற்று அனைத்து அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் சங்கங்களின் வாட்ஸ் ஆப்பில் பிரதான செய்தியாக அடுத்த மாதம் ( ஜூன் ) 3 ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சி.பி. எஸ் . திட்டம் ரத்து செய்யப்படுகிறது என்கிற அறிவிப்பினை , முதல்வர்ஸ்டாலின் வெளியிட உள்ளதாக தக வல் பரவி வருகிறது . மிகவும் நம்பத்தகுந்த தகவலின்படி இந்த செய்தி வெளியாகி இருப்பதாக அதில் உறுதி தெரிவிக்கப் பட்டுள்ளது . இந்த செய்தி அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் மத்தியில் கடும் மகிழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது.



9 comments:

  1. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  2. ஆசிரியர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.
    தயவு செய்து நாடே பார்க்கும் முகநூலில்
    1) CPS ஒழித்து GPF தரப் போகிறார்
    2) பழைய ஓய்வூதிய திட்டம் தரப் போகிறார்
    3) ஊதிய முரண்பாடு களையப் போகிறார்
    இப்படிப்பட்ட பதிவுகளை இட வேண்டாம்..
    இது போன்ற பதிவுகள் முகநூலில் அதிகம் காண முடிகிறது, இத்தகைய பதிவுகளால் தான் இன்றைய இணையதள சமூகம் ஆசிரியர்களுக்கு எதிரானதாக மாறியுள்ளது.
    இன்னும் சிலர் வழக்கமான அகவிலைப்படி வழங்கினால் கூட, நமக்கு அரசு எதோ புதிய சலுகை வழங்கியது போல முகநூலில் வாட்ஸ்அப் குழுவில் பதிவிடுகின்றனர்..
    பொதுமக்களை ஆசிரியர்களுக்கு எதிராக திருப்பும் வேலையை செய்தித்தாள்கள் செய்து கொண்டிருக்கின்றன, இந்த நிலையில் ஆசிரியர்களே அந்த வேலையை தன்னை அறியாமல் செய்து வருகின்றனர்.

    ReplyDelete
  3. நிலைமை சரியான பின்பு அரசு நல்ல முடிவை அறிவித்தால் நலம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி