தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு CPS ஒழிப்பு இயக்கம் வாழ்த்து. - kalviseithi

May 5, 2021

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு CPS ஒழிப்பு இயக்கம் வாழ்த்து.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்று மகத்தான வெற்றி மகுடம் சூடி , தமிழக முதல்வராக அரியணை ஏறும் தங்களுக்கு தமிழகத்தின் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

தமிழகத்தில் பணியாற்றும் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களும் , ஆசிரியர்களும் இவ்வெற்றியினால் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளோம் . இவ்வேளையில் 12 இலட்சம் அரசு ஊழியர் , ஆசிரியர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து , பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்திட விரைந்து அரசாணை வெளியிட ஆவண செய்ய வேண்டும் என்றும் தங்களைக் கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

1 comment:

  1. வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி