TNPSC - மே 2021 துறைத் தேர்வுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி , 15.06.2021 வரை நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2021

TNPSC - மே 2021 துறைத் தேர்வுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி , 15.06.2021 வரை நீட்டிப்பு.

 


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் நடத்தப்பட்ட துறை தேர்வுகளில் 129 தேர்வுகளின் முடிவுகளும் , எந்தெந்த தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்ற பட்டியலும் 08.05.2021 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. 14 தேர்வுகளைத் தவிர மற்ற அனைத்து துறைத் தேர்வுகளும் இடம்பெற்றுள்ளன. கொரோனா பெரும் தொற்று காரணத்தால் தமிழக அரசால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , மீதமுள்ள தேர்வுகளின் முடிவுகள் 08.06.2021 அன்று வெளியிடப்படும் . மேலும் , இத்தேர்வுகள் எழுத விழையும் தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு , மே 2021 துறைத் தேர்வுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி , 15.06.2021 வரை நீட்டிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி