வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினர் 7%, இதர மிகவும் பிறப்படுத்தப்பட்டோருக்கு 2.5% சிறப்பு ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 27, 2021

வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினர் 7%, இதர மிகவும் பிறப்படுத்தப்பட்டோருக்கு 2.5% சிறப்பு ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

 

Reservation GO No 75 , Date : 26.07.2021 - Download here...

வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிறப்படுத்தப்பட்டோருக்கு கல்வி சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும்,  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள  20% இட ஒதுக்கீட்டிற்குள்ளாக, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கித் தமிழ்நாடு சட்டம் 8/2021 இயற்றப்பட்டது.


அச்சட்டத்தின் அடிப்படையில், அரசுப் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இனச் சுழற்சி முறையைத் திருத்தி அமைக்க, சட்ட வல்லுனர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் உறுதி அளித்திருந்தார். அதன்படி, சட்ட வல்லுநர்கள் மற்றும்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டை 26-2-2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை இன்று வெளியிட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

இது மட்டுமின்றி, இந்த ஆண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்விச் சேர்க்கைகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான மேற்கூறிய புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

20 comments:

 1. BUDDHA ACADEMY

  PGTRB HISTORY ONLINE COACHING

  ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள முதுகலை வரலாறு பணித் தேர்விற்கு இணையவழி (Online) மற்றும் நேரடி வகுப்பு (Live class வார இறுதிநாட்களில் மட்டும்) வரலாறு பாடத்திற்கு எங்களது புத்தா அகாடமி தருமபுரி, மூலம் மிகச் சிறந்த முறையில் பயிற்சி அளிக்க உள்ளோம்.
  வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கி தொடர்ச்சியாக நடைபெறும். வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வரலாற்று பாடப்பிரிவு ஆசிரியர்கள் இவ்வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
  இணையவழி சம்பந்தமான தகவல் தங்களது சேர்க்கை உறுதி செய்த பின் தனியாக தங்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பப்படும்.

  எங்களது புத்தா அகாடமியில் வரலாறு பாடப்பிரிவுக்கு பயின்ற தேர்வர்களில் 2019 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுகலை ஆசிரியர் தேர்வில் வரலாறு பாடப்பரிவில் 26 நபர்கள் தேர்ச்சி பெற்றும் 19.02.21 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வரலாறு பாடப்பிரிவிற்கு வெளியிடப்பட்ட இரண்டாம் கட்ட தேர்வு முடிவில் 5 தேர்வர்களில் 3 தேர்வர்களும்(19PG081808333 PREMKUMAR M / 19PG081306525 PRIYANGA P / 19PG083901966 SEENUVASAN M) மொத்தம் 29 நபர்கள் தேர்ச்சி பெற்று தேர்வாகியுள்ளனர் அதில் மாநில அளவில் முதல் இடம்(19PG081812263 MOORTHI.M ) மற்றும் மூன்றாம் இடம்(19PG081808325 ADHIMOOLAM A) எங்களது புத்தா அகாடமி தேர்வர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்

  குறிப்பு : மற்ற பாடப்பிரிவு தேர்வர்களுக்கு உளவியல் (Psychology) வகுப்புகளுக்கும் பயிற்சி அளிக்கபடும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

  இங்ஙனம்
  புத்தா அகாடமி,
  தருமபுரி.

  தொடர்புக்கு
  புத்தா அகாடமி
  இடம்: பிஷப் ஹவுஸ்
  ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரில், தருமபுரி.
  +91 99620 27639 / +91 88380 72588

  YOUR SUCESS OUR AIM

  தவறாக நினைக்க வேண்டாம் இது விளம்பரம் அல்ல தேவைபடுபவர்கள் பயன்படுத்தி பயன் பெறவும்.

  நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. ஏன் இந்த மானங்கெட்ட பொழப்பு

   Delete
 2. விளம்பரம் செய்யவில்லை ௭ன்றால் ௭ன்ன வெங்காயத் திற்கு பதிவிடனும்

  ReplyDelete
 3. மருத்துவர் அய்யாவின் வெற்றி

  ReplyDelete
 4. அய்யமாருக எல்லாாாம் குச்சி ஐஸ்தான்

  ReplyDelete
 5. BEO posting போடுங்க

  ReplyDelete
 6. இவன் therkku pakkam varatum mukkulothor yaru katrum

  ReplyDelete
 7. என்ன ஒரு ஓரவஞ்சனை..மற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பாதிக்கப்பட மாட்டார்களா? பரிசீலனை செய் தமிழக அரசே..

  ReplyDelete
 8. உள் ஒதுக்கீடு என்பது மற்ற mbc பிரிவிற்கு பச்சை துரோகம்.தரும்ப்பெறு தமிழக அரசே!

  ReplyDelete
 9. இதை எதிர்த்து நீதிமன்றம் வழக்கு பதிவிட முடிவு செய்யப்பட்டது இவ்வாறு உள் ஒதுக்கீடு செய்ய சட்டப்படி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆனால் அவ்வாறு செய்ய வில்லை ஆகையால் இந்த சட்டம் செல்லாது மஹாராஷ்டிரா மாநிலத்தில் இவ்வாறு செய்த போது நீதிமன்றம் தடை விதித்தது

  ReplyDelete
  Replies
  1. high court Ku ponalum sari illa Supreme Court Ku ponalum sari eppothaiku onnum pannamutiyathu..

   Delete
 10. Sakthinadi பதிவுக்கு மிக்க நன்றி.MBC ல் வன்னியர்,சீர்மரபினர் தவிர 115 ஒன்றுபடாத சாதிகள் உள்ளன. இவர்களின் மக்கள்தொகை வன்னியர் மக்கள்தொகையை விட பலமடங்கு அதிகம். 115 சாதிகளுக்கு 2.5% மீதி எச்சீல்இலை போல,சாதி கட்சி வைத்து மிரட்டும் வன்னியர்களுக்கு 10.5% இட உள்ஒதுக்கீடு.அநியாயம்.அநியாயம். 115 சாதி சமூகத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்வி,வேலைவாய்ப்புகள் முழுமையாக பரிக்கப்பட்டுள்ளது.எதிர்காலத்தை இழந்து உள்ளனர்.அனைவரின் வாய்ப்புகளும் பறிக்கப்பட்டு வன்னியருக்கு வழங்கப்பட்டுஉள்ளது.ஓட்டு வங்கி அரசியலுக்காக ஓன்றிணையாத 115 சாதி சமுதாய குழந்தைகளின் எதிர்காலம் பறிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றம் இச் சட்டத்தை தயவுகூர்ந்து ரத்து செய்ய வேண்டும்.சமூகநீதி காக்கப்படவேண்டும்.

  ReplyDelete
 11. 115 சாதிகளும் இணைந்து பலமான கூட்டமைப்பு உருவாக்கவேண்டும்.அரசியல் கட்சி தொடங்க வேண்டும். எதிர்த்து போராட வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. Pannu, yar , venom sonna, poradi uiryara vttadthu vanniyartha neinga iila

   Delete
  2. poi vera urupadiana vela paru

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி