Flash News : +2 மதிப்பெண் பட்டியல் 19.07.2021 அன்று காலை 10 மணிக்கு வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்ககம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2021

Flash News : +2 மதிப்பெண் பட்டியல் 19.07.2021 அன்று காலை 10 மணிக்கு வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்ககம்.

 

19-ஆம் தேதி காலை 11 மணிக்கு +2 மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும்.


22-ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


அரசாணை ( நிலை ) எண் .105 பள்ளிக் கல்வித் ( அ.தே ) துறை , நாள் .12.07.2021 - ன்படி , 2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் , 19.07.2021 அன்று காலை 11.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம் . 1. www.tnresults.nic.in 2. www.dge1.tn.nic.in 3. www.dge2.tn.nic.in 4. www.dge.tn.gov.in மாணவர்கள் , பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.

மேலும் , பள்ளி மாணவர்கள் 22.07.2021 அன்று காலை 11.00 மணி முதல் www.dge.tn.gov.in , www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி