Flash News : கல்லூரிகளில் சேர ஜூலை 26 முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் பொன்முடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2021

Flash News : கல்லூரிகளில் சேர ஜூலை 26 முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் பொன்முடி

 

கல்லூரிகளில் சேர ஜூலை 26ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


கொரோனா பரவல் பிரச்னையால், தமிழக பள்ளி கல்வி திட்டத்தில் படித்த, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு இன்றி மதிப்பெண் வழங்கும் முறையின்படி, முடிவுகள் வெளியிடப்பட்டது. பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தேர்வு துறை அலுவலகத்தில், காலை, 11 மணியளவில் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டார்.


பிளஸ் 2 முடிவுகள் வெளியானதை அடுத்து, கல்லூரி சேர்க்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‛பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்' எனக் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி