தமிழக அரசு பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு – 40% ஆக அதிகரிப்பு! - kalviseithi

Sep 13, 2021

தமிழக அரசு பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு – 40% ஆக அதிகரிப்பு!

 


தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீதான இறுதி நாள் விவாதம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அரசு பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவிகிதமாக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.


மகளிர் இடஒதுக்கீடு:


தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஆகஸ்டு 20ந் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் படி கடைசி நாள் அமர்வு இன்று நடைபெறுகிறது. அதில் நீட் தேர்வு மற்றும் காவல் துறைக்கான சிறந்த திட்டங்கள் மற்றும் சலுகைகளுக்காக தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டது. அதில் காவலர்களின் வாரிசுகள் 1,132 பேருக்கு அரசு பணி வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.


பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதில் திமுக அரசு அக்கறையுடன் இருக்கிறது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்கள் 33 சதவிகித இடஒதுக்கீடு பெறுவதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி இந்திய மாதர் சம்மேளனம் சார்பாக போராட்டம் நடத்தியது.

13 comments:

  1. PG TRB 2021
    Live Online COACHING Classes
    & TEST SERIES BATCH

    ALL SUBJECTS + EDUCATION + GK ( MATHS, PHYSICS, ZOOLOGY, COMMERCE, HISTORY & Computer Instructor )

    Model classes recorded videos YouTube link:
    Long Press the link please
    https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

    For Admission: 6380727953, 9976986679
    Magic Plus Coaching Centre, ERODE-1.

    ReplyDelete
  2. ஆண்களே இனிமே கூலி வேலைக்கு போங்க
    பெண்களே நீங்க மட்டும் அரசு வேலைக்கு போங்க

    Funny world, funny system,funny Rules

    ReplyDelete
  3. வேலையே போடுற மாதிரி இல்ல இதில் இடஒதுக்கீடு தந்து யாருக்கு லாபம்? ஒரு போட்டி தேர்வும் நடக்குற மாதி தெரியல.....

    ReplyDelete
  4. 10 ஆண்கள் வேளை இழப்பு

    ReplyDelete
  5. 10% ஆண்கள் வேளை இழப்பு

    ReplyDelete
  6. டாஸ்மாக் ல் ஆண்களுக்கு 100% இட ஒதிக்கீடு உள்ளது

    ReplyDelete
  7. கூடிய விரைவில் 100% இடஒதுக்கீடு வரும்

    ReplyDelete
  8. Already 50 percent of womens are employed in Govt. Service.☀️

    ReplyDelete
  9. Tet 2013 eppa job poduvinga eppa vidyal pirakum solunga

    ReplyDelete
  10. 60% ஆண்களுக்கா?
    இல்லை தானே

    ReplyDelete
  11. An employed lady would marry another employed man, but an employed man would marry even an unemployed woman. think about economic equality. the former will be far richer and in case of latter economic equality would prevail.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி